
ரோஜாப்பூவில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
பயன்கள்
ரோஜாப்பூ சருமத்தை நீரேற்றத்துடனும், மென்மையாகவும் வைக்கும். இதன் பண்புகள், ஃப்ரீராடிகல்களின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இயற்கையான பொலிவைத் தருகிறது.
நீங்கள் வீட்டிலேயே ரோஜா பேக் தயாரிக்கலாம்.
1. ரோஜா இதழ் - தேன் கலந்த பேக்
இது நீரேற்றத்துடனும், மிருதுவாகவும் ஆக்கும். ஒரு கைப்பிடி ரோஜா இதழ்கள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர்.
ரோஜா இதழ்களை ரோஸ் வாட்டரில் 15 நிமிடம் ஊற விடவும். பிறகு தேன் கலந்து இதை ஃப்ரிட்ஜ்ஜில் இருபது நிமிடங்கள் வைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
2. ரோஜா ஆலோவேரா பேக்
கைப்பிடி ரோஜா இதழ்களை கசக்கி ஆலோவேரா ஜெல்லுடீன் சேர்க்கவும். இத்துடன் ரோஸ் வாட்டர் உம் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் ஜொலிக்கும்.
3. ரோஜா இதழ்கள் யோகர்ட் பேக்
இந்த பேக் சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டாக செயல்படுகிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் ரோஜா இதழ்களை நன்கு மசித்து அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் யோகர்ட் சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
4. ரோஜா இதழும் சந்தனமும்
ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை கசக்கி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப் பௌடர் சேர்த்து அதில் சிறிது காய்ச்சாத பால் விட்டு முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இது அரிப்பைத் போக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும்.
5. ரோஜா இதழ் மஞ்சள் பொடி பேக்
ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை கசக்கி அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் போடி மற்றும் சிறிது காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
6. ரோஜா கோதுமை தவிடு பேக்
ஒரு கைப்பிடி ரோஜா, ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை தவிடு சேர்த்து அரைத்து அதில் சிறிது காய்ச்சாத பால் விட்டுக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, கண்ணாடி போன்று முகம் ஜொலிக்கும். மேற்கூறிய ரோஜா பேக்குகள் முகத்திற்கு பொலிவை கூட்டுவதுடன் சுற்றுச் சூழலிலிருந்தும் சருமத்தைப் காக்கிறது.