நமக்கு நன்கு தெரிந்த ஒரு உயிரினத்தைப் பற்றி தெரியாத விஷயங்கள் நிறையவே உள்ளன. அந்தவகையில், இப்போது பார்க்கவுள்ள உயிரினத்தைப் பற்றி நாம் அறியாத விஷயங்களை காணலாம். அது எந்த உயிரினம் என்று கண்டறிய முடிகிறதா என்று பாருங்கள்.
இந்த உயிரினம் உணவில்லாமல் ஒருவருடம் கூட வாழுமாம். நீர்க்கூட தேவையில்லை, ஆனால் ஈரப்பதம் அதற்கு மிகவும் அவசியம். அதேபோல் இது 6 நாட்கள் கூட மூச்சை இழுத்து வைத்துக்கொள்ளுமாம். எந்த மேற்பரப்பிலும் எளிதாக ஏறிவிடும். இந்த உயிரினம் பல வருடங்களுக்கு முன்பு வரை வெறும் 600 வகைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 2 ஆயிரம் வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில், இவற்றின் க்யூட்டிகல் அல்லது தோல், புற ஊதா ஒளியை உறிஞ்சி, அதை புலப்படும் ஒளியாக பிரதிபலிக்கிறது. இதனால், விளக்குகள் பயன்படுத்தியே ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்தின் மீதமுள்ள இத்தனை வகைகளை கண்டறிந்திருக்கிறார்கள். புதிதாக பிறக்கும் குட்டிகள், தங்களது தாயிடம் இருந்தே சவ்வுகளை நேரடியாக பெறுகின்றன. அதேபோல் தாயின் முதுகிலேயே சவாரியும் செய்கின்றன. காடுகளில், வாழ்பவை பொதுவாக இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆனால், மனிதர்கள் வளர்ப்பவை 25 ஆண்டுகள் வரைக்கூட வாழும்.
முன்னதாக இவை கடல்களில் வாழ்ந்திருக்கலாம், மேலும் செவுள்கள் கூட இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. பின்னர் 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த உயிரினங்களில் சில நிலத்திற்குச் சென்றன. சரியாக 400 மில்லியன் ஆண்டுகளாக இந்த உயிரினங்கள் நிலத்தில் வாழ்ந்து வருகின்றன. அவை புக் நுரையீரல்களைக் கொண்டிருப்பதால், 48 மணிநேரம் வரை நீரில் மூழ்கி உயிர்வாழ முடியும்.
மற்ற உயிரினங்களுக்கு 10 மடங்கு ஆக்ஸிஜன் வேண்டுமென்றால், இவற்றிற்கு அதில் ஒரு மடங்கு இருந்தாலே போதும். அதனாலேயே நமக்கு மிகவும் அறியப்பட்ட உயிரினமாகவும், அழியாத உயிரினமாகவும் இருந்து வருகிறது.
இந்த தகவல்கள் மூலம் எந்த உயிரினம் என்று கண்டுபிடித்தீர்களா???
நீங்கள் நினைத்தது தேள் என்றால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். ஆம்! தேள்தான் மேற்சொன்ன அனைத்திற்கான விடையாகும்.