கால் கருமையை நிரந்தரமாகப் போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

Beauty tips in tamil
To get rid of dark feet
Published on

முகத்திற்குப் பிறகு, கைகள் மற்றும் கால்கள் மிக முக்கியமான மற்றும் வெளிப்படையான உடற்பாகங்களாகும். இதில் இருக்கும் கருமையை எப்போதும் மறைக்க முடியாது. பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் கை, கால்களை கவனிக்க மறந்து விடுவர். இந்த அலட்சியத்தால் வறட்சி ஏற்படுவது மட்டுமின்றி கை, கால்கள் கருமையாகிவிடும். கருமையான கைகள் மற்றும் கால்களை பிரகாசமாக்க உதவும் சில எளிய குறிப்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

1. எலுமிச்சை சாறு, தேன் அல்லது சர்க்கரை: எலுமிச்சை சாற்றை எடுத்து அதில் தேனை சேர்த்துப் பாதங்களில் 30 நிமிடங்களுக்கு தடவி வைக்கவும். எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து பாதங்களின் மேல் பூசி மசாஜ் செய்ய பாதத்தின் கருமை அகலும்.

2. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஜூஸ் செய்து, அதை நேரடியாக பாதத்தின் மேல் பகுதியில் தடவி 10 - 12 நிமிடங்கள் வைத்திருந்து கழுவினால், பாதத்தின் கருமை நீங்கும்.

3. தேன் மற்றும் பப்பாளி: பழுத்த பப்பாளி 4 - 5 க்யூப்ஸ் எடுத்து, அதனோடு ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மசித்துக் கொள்ளவும். இதை பாதங்களில் பூசி 20 முதல் 30 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து தண்ணீரில் கழுவி வர கருமை நீங்கும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரையின் அழகு ரகசியம்: சருமத்தின் மாசுக்களை அகற்றும் ஆற்றல்!
Beauty tips in tamil

4. வெள்ளரிக்காய் சாறு: வெள்ளரிக்காயின் சாற்றை பிழிந்து எடுத்து அதில் காட்டனை நனைத்து பாதத்தின் கருமை நிறைந்துள்ள பகுதியில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் உலரவிட்டு பின்பு எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

5. தக்காளி மற்றும் தயிர்: தக்காளியை பச்சையாக எடுத்து தோலை நீக்கி அதனோடு 1 - 2 டீஸ்பூன் தயிரை சேர்த்து, பாதத்தின் மேற் பகுதியில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ கருமை நீங்கும்.

6. ஆரஞ்சு தோல் மாஸ்க்: ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாறு, இரண்டு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் புல்லர்ஸ் எர்த் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து தோலின் கருமையான பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவ கருமை விலகும்.

7. மஞ்சள்: ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சளை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது வெள்ளரி சாறு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கருமையான இடத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, கருமை நீங்கி இயற்கையான நிறம் மாறும்.

-பாலாஜிகணேஷ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com