அலுவலகம் செல்லும் பெண்களுக்கான சிம்பிள் மேக்கப் டிப்ஸ்!

beauty images
beauty imagesImage credit - pixabay
Published on

லுவலகத்திற்குச் செல்லும் சமயம் ஆடம்பரமாக மேக்கப் செய்து கொண்டால் மற்றவர்களிடமிருந்து நம்மை சிறிது வித்தியாசப்படுத்திகாட்டும். மேக்கப் போட்டாலும் போடாததுபோல் அதே சமயம் பளிச்சென்றும் இருக்க வேண்டும். மிக எளிமையாகவும் அதே சமயம் அழகாகவும் இருப்பது நம் தன்னம்பிக்கையை கூட்டும்.

கன்சீலர்:

சிலருக்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் தென்படும். இவர்கள் கன்சீலர் கிரீம்களை சிறிதளவு தடவி விரல்களால் மெதுவாக அப்ளை செய்ய கருவளையம் மறைந்து முகம் அழகு பெறும்.

கண்கள்:

பளிச்சென்ற அழகுடன் இருக்க கண்களில் சிறிது கவனம் செலுத்தலாம். கண்களை சரியாக அழகுப் படுத்தினால்தான் முகம் ஜொலிக்கும்.காஜல், ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்கரா போன்றவற்றை உபயோகிக்க கண்கள் அழகு பெறும்.

ஃபவுண்டேஷன் கிரீம்:

அலுவலகத்தில் நாள் முழுக்க பிரஷ்ஷாக மலர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம் சருமத்தின் நிறத்தை சமன்படுத்தும் லேசான மேட் பவுண்டேஷனை போடலாம்.

பிளஷ்: 

கன்னங்களில் நியூட்ரல் கலர் பிளஷை மென்மையாக தடவலாம். பீச் அல்லது ரோஸ் போன்ற மென்மையான மியூட் டோன்களில் இயற்கையாக தோற்றமளிக்கும் ப்ளஷ் மூலம் கன்னங்களுக்கு அழகு சேர்க்கலாம்.

புருவங்கள்: 

புருவங்களை சரியாக ஷேப் செய்து நேர்த்தியான புருவங்களைப் பெறலாம். அழகாக வடிவமைக்கப்பட்ட புருவங்கள் நம் தோற்றத்தில் அழகைக் கூட்டும்.

இதையும் படியுங்கள்:
வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது!
beauty images

உதடுகள்:

உதடுகள் வறண்டு உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடன் இருப்பது முகத்திற்கு மெருகைக் கூட்டும். லிப்ஸ்டிக்கில் அடர்த்தியான வண்ணங்களை தேர்வு செய்யாமல் லேசான வண்ணங்களை உதட்டில் அப்ளை செய்யலாம் அல்லது லிப் பாம் உபயோகிக்கலாம்.

ஹேர் ஸ்டைல்:

முக அமைப்பிற்கு ஏற்ப ஹேர் ஸ்டைலை சிறிது மாற்றிக் கொள்ள நம் அழகு கூடும். அலுவலகத்திற்கு செல்லும் போது அதிக மேக்கப் செய்வது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். எனவே சிம்பிளான அதே சமயம் நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நம்மை அழகுப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com