பெண்களின் அழகை மேம்படுத்தும் எளிய இயற்கை வழிமுறைகள்!

Simple Natural Ways to Enhance Women's Beauty!
Azhagu kurippugal
Published on

ல்லூரிக்குச் செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் மிகுந்த முனைப்போடு இருப்பார்கள். மாசுமரு இல்லாத பொலிவான சருமத்தை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

அடர்த்தியான கண் இமைகள் மூலம் கண்களின் அழகை அதிகரிக்கவும்

கண் இமைகள் உடைந்து மெலிந்திருந்தால், ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்த, கண் இமைகள் இயற்கை யாகவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.  பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து தடவ, இந்த கலவை,  கண் இமைகளை தடிமனாகவும் நீளமாகவும் மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

தேங்காய் எண்ணெயால் உங்கள் புன்னகையை பிரகாசமாக்குங்கள்

பெண்கள் தங்கள் பற்களின் பளபளப்பை அதிகரிக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஸ்பூன் எண்ணெயை உங்கள் வாயில் சிறிது நேரம் வைத்து, அதை துப்ப பற்கள் சுத்தமாவதோடு மஞ்சள் கரையும் நீங்கும்.

முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்

முடி வளர்ச்சி மிகவும் மெதுவாக இருந்தால், ரோஸ்மேரி எண்ணெயை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். இது  முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, அவற்றை வலுப்படுத்தும். மேலும் பிளவுபட்ட முடி மற்றும் சேதமடைந்த முடியை சரிசெய்யவும் இது உதவும்.

இதையும் படியுங்கள்:
sweeta, styla, smarta ... ட்ரெண்டி லினென் காட்டன்ஸ்!
Simple Natural Ways to Enhance Women's Beauty!

சன் ஸ்க்ரீன் தடவவும்

UVA மற்றும் UVB கதிர்கள் இரண்டையும் தடுக்கும் குறைந்தது 15 SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாகும். வாழ்நாள் முழுவதும் சூரிய ஒளியில் இருப்பது சுருக்கங்கள், வயது புள்ளிகள் மற்றும் பிற சரும பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்துபாதுகாக்க வேண்டும். லேபிளில் 'நான்காமெடோஜெனிக்' அல்லது 'நோனாக்னெஜெனிக்' என்று இருப்பதை உறுதிசெய்து வாங்குங்கள்.

உங்களை ஹைட்ரேட் செய்யவும்

தினமும் 8 கிளாஸ்கள்  தண்ணீர் குடிக்கவும். மேலும், தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, திராட்சைப்பழம் மற்றும் பாகற்காய் போன்ற அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.

முகத்தை நன்றாக கழுவவும்

முகத்தை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தை வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்து கழுவவும்,  கிளென்சரில் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம் அல்லது பீட்டா ஹைட்ராக்சில் அமிலம் இருப்பதை உறுதிசெய்யவும்.

இதையும் படியுங்கள்:
ஆலிவ் ஆயிலின் மாயம்: தலைமுடி பராமரிப்பில் இயற்கையான தீர்வு!
Simple Natural Ways to Enhance Women's Beauty!

தினமும் முகத்தை தட்டவும்

உங்கள் முகத்தை பிரகாசமாக்க ஒவ்வொரு முறையும் எதையாவது தடவ வேண்டிய அவசியமில்லை, மாறாக உங்கள் முகத்தில் தட்டுவதன் மூலம் உங்கள் சருமத்தை பளபளப்பாக்கலாம். பெரும்பாலும் பெண்கள் முக மசாஜ் மற்றும் யோகாவை நாடுகிறார்கள், அவற்றில் ஒன்று முகத்தை தட்டுவது. உங்கள் முகத்தை மெதுவாக தட்டுவதன் மூலம் உங்கள் இரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் உங்கள் சருமம் பளபளக்கும்.

மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டாலே இயற்கையிலேயே அழகான பெண்கள் மேலும் அழகுடையவர்களாக மாறுவார்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com