உதடு வறண்டு போகுதா? சரிசெய்ய ஈஸி டிப்ஸ்!

lip care
lip care
Published on

சிலருக்கு உதடு காய்ந்து ஈரப்பதமின்றி வறண்டு போவதைப் பார்த்திருப்போம். காலநிலையில் மாற்றம் ஏற்படும் போது அது நம் சருமத்திலும் பிரதிபலிக்கும். முக்கியமாக நம்முடைய உதடுகள் வறண்டு வெடிக்கத் தொடங்கும். தற்போது பெண்கள் உதட்டை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள 'லிப் பாம்' பயன்படுத்துகின்றனர். ஆனால், இது தற்காலிக நிவாரணம் தரக்கூடியதேயாகும். இந்தப் பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உதட்டை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

1.தேங்காய் எண்ணெய் - சர்க்கரை ஸ்க்ரப்:

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யில் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து அதை உதட்டில் லேசாக தடவி விட்டு 5 நிமிடத்திற்கு பிறகு கழுவி விடவும்.

உதடுகளில் எக்ஸ்போலியேஷன் செய்வது அவசியமாகும். இது உதட்டை ஈரப்பதத்துடன் வைக்கவும், இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. உதடுகளை மென்மையாகவும், இளஞ்சிவப்புடனும் வைத்துக் கொள்ள தேங்காய் எண்ணெய்-சர்க்கரை ஸ்க்ரப் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு ஈரப்பதத்தை தருகிறது. மேலும் சர்க்கரை ஸ்க்ரப்பாக செயல்பட்டு இறந்த செல்களை நீக்குகிறது. இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் உதடுகள் மென்மையாக மாறும்.

2.நெய்-மஞ்சள் கலவை:

நெய் அரை தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து தூங்குவதற்கு முன் உதடுகளில் தடவி அதை அப்படியே இரவு முழுவதுமே விட்டுவிடவும். காலையில் எழுந்து கழுவி விட உதட்டில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம். நெய் உதட்டை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். இதுவே மஞ்சள் கிருமிநாசினியாக செயல்பட்டு உதட்டில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும்.

3.தேன்-ரோஜை இதழ்கள்:

ரோஜா இதழ்களை சிறிது எடுத்து பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி தேனைவிட்டு இந்த கலவையை உதட்டில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். தேன் இயற்கையாகவே உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உதடுகளில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகளைக் குறைக்கிறது. ரோஜா இதழ்கள் உதடுகளின் நிறத்தை பராமரிக்கிறது. எனவே, உதடுகளை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற தேன் மற்றும் ரோஜா கலவை சிறந்ததாகும். இவற்றை பயன்படுத்தி உதட்டை ஈரப்பதத்துடனும், பளபளப்பாகவும் பாதுகாக்கவும்.

இதையும் படியுங்கள்:
கண் மையில் அழகுடன் ஆபத்தும் கலந்திருக்கிறது! அலட்சியம் வேண்டாம் பெண்களே!
lip care

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com