நெற்றியில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்கும் எளிய வழிகள்! 

Simple ways to remove dark spots on forehead!
Simple ways to remove dark spots on forehead!
Published on

நம் முகம்தான் நம்மைப் பற்றிய First Impression-ஐ தருவதால் அதை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் முகப்பரு, சூரிய ஒளி தாக்கம், வயதாகுதல் போன்ற காரணங்களால் நெற்றியில் கரும்புள்ளிகள் தோன்றலாம். இது நம் தன்னம்பிக்கையைக் குறைக்கும். ஆனால், இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தப் பதிவில் நெற்றியில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் பல்வேறு வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம். 

நெற்றியில் தோன்றும் கரும்புள்ளிகள் தோலின் நிறமியான மெலனின் அதிகமாக உற்பத்தியாகும்போது ஏற்படுவதாகும். முகப்பரு, ஹார்மோன் மாற்றங்கள், அதிகப்படியான சூரிய ஒளி, வயது ஆகியவை இதற்கு பொதுவான காரணங்கள். கரும்புள்ளிகள் நம் அழகைக் கெடுப்பவையாக இருந்தாலும் அவை தீங்கு விளைவிப்பவை அல்ல. இருப்பினும் உங்களது தோற்றத்தை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்க அவற்றை நீக்க வேண்டும். 

இயற்கையாக கரும்புள்ளிகளை நீக்கும் வழிமுறைகள்: 

எலுமிச்சை சாற்றில் இயற்கையான பிளீச்சிங் பண்பு உள்ளது. இது கரும்புள்ளிகளை மங்கச்செய்ய உதவும். ஒரு காட்டன் பஞ்சில் எலுமிச்சை சாற்றை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைஸர் தடவுங்கள். 

கற்றாழை ஜெல் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டது. இது சருமத்தை அழகாகப் பராமரிக்க உதவும். பாதிக்கப்பட்ட பகுதியில் கற்றாழை ஜெல் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்ட பின் கழுவி விடுங்கள். இதை வாரத்தில் இருமுறை செய்து வந்தால், விரைவில் கரும்புள்ளிகள் மறைவதைப் பார்க்கலாம்.‌

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவும். ஒரு ஸ்பூன் தயிரை தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவி மாய்ச்சரைசர் தடவவும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையத் தொடங்கும். 

இதையும் படியுங்கள்:
வியக்கத்தக்க மருத்துவ குணம் கொண்ட கருப்பு திராட்சை விதைகள்!
Simple ways to remove dark spots on forehead!

மருத்துவ சிகிச்சைகள்: 

லேசர் சிகிச்சை மெலனின் நிறமியை குறிவைத்து கரும்புள்ளிகளை அழிக்க உதவுகிறது. இது ஒரு விரைவான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறை. ஆனால் எரிச்சல், சிவந்து போதல், தற்காலிக நிறமாற்றம் போன்ற பக்கவிளைவுகளை இது ஏற்படுத்தலாம். 

ரசாயன தோல் உரித்தல் என்னும் முறையில் சருமத்தின் மேல் தோல் அடுக்கை அகற்ற ஒரு சிறப்பு கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இது கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் மற்றும் சூரிய ஒளி சேதத்தை சிகிச்சை அளிக்க பயனுள்ளதாக இருக்கும். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நெற்றியில் தோன்றும் கரும்புள்ளிகளை எளிதாக சரி செய்ய முடியும். உங்கள் சருமத்தின் வகை, கரும்புள்ளிகளின் தீவிரம் மற்றும் உங்கள் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து உங்களுக்கு எந்த சிகிச்சை சிறந்தது என்பதை ஒரு சரும மறுத்தவரிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com