கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 சதவிகிதம் உள்ளது. திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. இனி, கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவப் பயன்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. கருப்பு திராட்சை விதையில் உள்ள உட்கூறு ஒன்று புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
2. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் இ பாதுகாப்பில் இந்த விதைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.
3. வைட்டமின் சி சத்தை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. இரத்தக் கொதிப்பு நோய்க்கு இது அருமருந்தாகப் பயன்படுகிறது. இரத்தக் குழாய்களில் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழ விதை குறைக்கிறது.
4. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் இரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.
5. இரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
6. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
7. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.
8. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.
இவ்வளவு அருமையான திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை மட்டும் தின்று பயன் ஏதும் இல்லை. மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.
கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவைதான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே, திராட்சைப் பழத்துடன் விதைகளையும் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும்.
உடல் வளர்ச்சியில் குறைபாடு உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், சரும வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது. திராட்சை விதை சாறு நம்முடைய சருமத்திற்கு ஒரு இயற்கை பொக்கிஷம். அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், வீக்கத்தைக் குறைக்கும் திறன் மற்றும் சருமத்தின் நிறத்தை வெளியேற்றும் திறன் ஆகியவை நம் சருமப் பராமரிப்பு வழக்கத்திற்கு மதிப்பு மிக்கதாகும். இந்த விதைகள் வலுவான ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இது சருமத்தை புத்துயிர் பெற உதவுகிறது.
திராட்சையை ஃபேஸ் பேக் வடிவில் வழக்கமாகப் பயன்படுத்துவது, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும். இதனால் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் குறைகின்றன.
இத்தனை மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாகத் தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனி மேலாவது திராட்சையுடன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவோம்.