மழையோ குளிரோ... உங்கள் சரும பாதுகாப்பிற்கான ஆயுதம் இதோ...

Rainy season skincare
Rainy season skincare
Published on

இந்தியாவில் குறிப்பாக இந்த ஈரப்பதமான பருவமழை காலம், வரப்போகும் வறண்ட குளிர்காலத்தில் நமது சருமம் பல இன்னல்களைச் சந்திக்கிறது. இதற்கு பேக் செய்யப்பட்ட கிரீம்கள் அல்லது வணிகப் பொருட்களைச் சாராமல், அனைவருக்கும் பொருந்தும் வகையில் இயற்கையாக கிடைக்கும் சில ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மழைக் காலங்களில் (Monsoon Skincare) என்ன செய்யலாம்?

மழைக்காலங்களில் நம்மைச் சுற்றியுள்ள ஈரப்பதம் நம் உடலில் அதிகப்படியான எண்ணெய்யை உருவாக்க வைக்கும் (excess oil). இதனால் முகத்தில் துளைகளை (clogged pores) வரவழைத்து, பல அலர்ஜிகளுக்கு வழிவகுக்கிறது. இதற்கு சுத்தமான காய்ச்சாத பால் (raw milk) அல்லது கடலை மாவை (gram flour) ரோஸ் வாட்டருடன் (Rose water) கலந்து வீட்டிலேயே உங்களுக்கென ஒரு திரவத்தை உண்டாக்கி வைத்து தினமும் இரண்டு முறை உங்கள் முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இவை முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி உங்கள் சருமத்தில் ஒரு சமநிலையான ஈரப்பதம் உண்டாக உதவுகின்றன.

வேப்ப இலைகளைத் தண்ணீரில் போட்டு அதை சுடவைத்து பாக்டீரியா எதிர்ப்பு டோனராக (antibacterial toner) உங்கள் சருமத்தில் உபயோகித்துக் கொள்ளுங்கள்.

உடலில் அதிகப்படியான எண்ணெய் தேய்ப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். அதற்கு பதிலாக சரும நீரேற்றத்திற்கு (Hydration) கற்றாழை ஜெல் அல்லது வெள்ளரி சாற்றைப் (cucumber juice) பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் சருமத்தில் இயல்பாக உரியும் தோல்களை அகற்ற அரிசி மாவும், தயிர் சேர்ந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தேய்த்து மென்மையாக அந்தத் தோல்களை விலக்கிக் கொள்ளுங்கள். அந்த உரிந்தத் தோல்களை அகற்ற சரசரவென தேய்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது ஈரமான காலநிலையில் உங்கள் சருமத்தை மேலும் எரிச்சலடையச் (irritate) செய்யும்.

குளிர்காலம் (Winter Season):

அதேபோல் வரப்போகும் குளிர்காலமும் சுற்றி இருக்கும் காற்றை வறண்ட செய்து, உடலில் சருமம் உரிவது, அரிப்பு ஏற்படுவதை வரவைக்கும். எனவே, இதைத் தடுக்க நீரேற்றம் (hydration) முக்கியமானது. இந்தக் காலகட்டத்தில் உங்கள் உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க குளிப்பதற்குமுன் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய்யை (sesame oil ) உடலில் பயன்படுத்துங்கள்.

முக்கியமாக உங்கள் உடலில் மிஞ்சி இருக்கும் இயற்கையான எண்ணெய் (Natural oils) படலம் அகற்றப்படுவதைத் தடுக்க, குளிப்பதற்கு சற்று வெதுவெதுப்பான நீரைப் (lukewarm water) பயன்படுத்துங்கள்.

மசித்த வாழைப்பழம், தேனுடன் கலந்த கலவையை உங்கள் முகத்தில் வாரம் ஒருமுறை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
'ஃபர்ஸ்ட் டைம்' ஸ்கின் கேர் டிப்ஸ்! 'ஆல் இன் ஒன்' மேஜிக்!
Rainy season skincare

இது உங்கள் முகச் சருமத்திற்கு கொஞ்சம் ஊட்டமளிக்கும்.

அதோடு சரும ஆரோக்கியத்தை(Skincare) ஒருசேர பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.

நெய், நட்ஸ் (nuts) மற்றும் பருவக்கால பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தால்?

இந்தப் பருவங்களில் சருமப் பராமரிப்பைப் புறக்கணிப்பது தொடர்ச்சியான முகப்பரு, மந்தநிலை, முன்கூட்டிய வயதான தோற்றம் மற்றும் பூஞ்சை (Fungus) தொற்றுகளுக்குக்கூட வழிவகுக்கும். பின் சருமம் பலவீனமடைந்து பல அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com