பியூட்டி பார்லர் போகாமலேயே 'ஆயில் ஸ்கின்' பிரச்னையை சரி செய்வது எப்படி?

Skin Care tips
Skin Care tips
Published on

கோடைக்காலமோ இல்லையோ, உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் , ஆண்டு முழுவதும் அது உங்களைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். இதனுடன், முகப்பரு, வியர்வை என பல பிரச்னைகளை சந்தித்து கொண்டே தான் இருக்கிறீர்கள். என்னதான் மேக்கப் போட்டாலும் கூட அது கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடும் என்றுதானே வருத்தம் கொள்கிறீர்கள். கவலையை விடுங்கள் இதோ வந்துவிட்டது தீர்வு.

ஏன் ஆய்லி ஸ்கின்?

அதிகபடியான செபாசியஸ் சுரப்பியின் விளைவுதான் எண்ணெய் பசை சருமம். இந்த சுரப்பிகள் அதிகமாக செயல்படும் போது, ​​அவை செபம் எனப்படும் மெழுகு அல்லது எண்ணெய்ப் பொருளை உற்பத்தி செய்கின்றன.

க்ரீன் டீ ஸ்கரப்:

கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல முகத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யைக் குறைத்து முகத்தின் பொலிவை பராமரிக்கிறது.

செய்முறை:

க்ரீன் டீ பையை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்பு அது ஆறியவுடன் அதனுடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்க்கவும், பின்னர் இந்த கலவையை நன்கு கலக்கி அதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யவும். 5 நிமிடங்கள் பிறகு இதனை நீங்கள் கழுவிவிடலாம். தினமும் இதை செய்து வந்தாலே போதும். முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு காணாமல் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
ஐஸ் கட்டிய முகத்துல வச்சா என்ன ஆகும் தெரியுமா... பியூட்டி பார்லரே தேவையில்லை!
Skin Care tips

பருப்பு ஸ்க்ரப்:

சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல பருப்பு வகைகள் உள்ளன.அதில் ஒன்று தான் மசூர் பருப்பு. இதைப் பயன்படுத்துவதால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் குறைகிறது மற்றும் முகம் மென்மையாக உணர ஆரம்பிக்கிறது.

செய்முறை:

முதலில் மசூர் பருப்பை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள், தயிர் சேர்த்து இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவி 2 -3 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். அதன் பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும். இதனை வாரம் ஒரு முறை செய்தாலே போதும் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

-விஜி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com