ஐஸ் கட்டிய முகத்துல வச்சா என்ன ஆகும் தெரியுமா... பியூட்டி பார்லரே தேவையில்லை!

Beauty Tips
Beauty Tips
Published on

பொதுவாக நாம் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த க்ரீம்களையும் லோஷன்களையும் வாங்கிப் பூசுகிறோம். மாதம் தோறும் பியூட்டி பார்லருக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்களும் உண்டு. ஆனால் நாம் எதிர்பார்க்கும் அந்த பொலிவு நமக்குக் கிடைக்கிறதா என்றால் அது சந்தேகமே. 

சில நேரங்களில் நாம் சற்றும் யோசிக்காத, மிகவும் விசித்திரமான முறைகள் நம் சருமத்திற்கு ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களைத் தரும். நம் சமையலறையிலும், அன்றாட வாழ்விலும் நாம் தூக்கி எறியும் பொருட்கள் கூட நம் அழகைக் கூட்டும் ரகசியத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அப்படிப்பட்ட சில வித்தியாசமான, அதிக பலன் தரக்கூடிய அழகு குறிப்புகளைப் பார்க்கலாம் வாங்க.

குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவு!

காலையில் எழுந்ததும் முகம் வீங்கிப் போய், கண்கள் சோர்வாகக் காணப்படுவது பலருக்கும் நடக்கும் ஒன்று. இதற்கு ஒரு அற்புதமான தீர்வு உள்ளது. ஒரு பெரிய கிண்ணத்தில் நிறைய ஐஸ் கட்டிகளைப் போட்டு, அதில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பிறகு அந்த நீருக்குள் உங்கள் முகத்தை ஒரு பத்து அல்லது பதினைந்து வினாடிகள் முக்கி எடுக்கவேண்டும்.

இது கேட்பதற்குக் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் இப்படிச் செய்யும்போது முகத்தில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி, பின் விரிவடைகின்றன. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் உடனடியாக ஃப்ரெஷ்ஷாக மாறும். வீக்கம் குறைந்து, சருமம் இறுக்கமடைவதோடு, முகத்துளைகள் சுருங்கி முகம் கண்ணாடி போல மின்னும்.

அரிசி கழுவிய நீர்!

கொரிய நாட்டுப் பெண்களின் சருமம் எப்படி அவ்வளவு பளபளப்பாக இருக்கிறது என்று நாம் எப்போதாவது யோசித்திருப்போம். அவர்களின் மிகப்பெரிய ரகசியம் அரிசி கழுவிய நீர். நாம் சமைக்கும்போது அரிசியைக் கழுவிவிட்டு அந்த நீரைத் தேவையில்லை என்று கீழே ஊற்றிவிடுவோம். ஆனால் அந்த நீரில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. 

அரிசி கழுவிய நீரையோ அல்லது சாதம் வடித்த கஞ்சியையோ எடுத்து, அதை ஒரு காட்டன் துணியில் நனைத்து முகம் முழுவதும் துடைத்து வரலாம். இது வெயிலினால் ஏற்படும் கருமையைப் போக்கி, சருமத்திற்கு ஒரு விதமான பளபளப்பைத் தருகிறது. இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விலையுயர்ந்த டோனர்களுக்கு வேலையே இருக்காது.

இதையும் படியுங்கள்:
நம்பவே முடியல! வாழைப்பழத் தோல் செய்யும் மேஜிக்கைப் பற்றி யாருமே சொல்லல!
Beauty Tips

வாழைப் பழத்தோல் மசாஜ்!

வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் குப்பையில் போடுவதுதான் வழக்கம். ஆனால் அந்தத் தோலின் உட்புறத்தில் இருக்கும் நார்ப்பகுதிக்கு முகப்பருவை விரட்டும் சக்தி உள்ளது. வாழைப்பழத் தோலைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதை வைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக முகப்பரு தழும்புகள் உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

தலையணை உறை!

இது சரும பராமரிப்புப் பொருள் அல்ல, ஆனால் இது சருமத்தைப் பாதுகாக்கும் ஒரு முறை. நாம் பயன்படுத்தும் காட்டன் தலையணை உறைகள் நம் முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் முகம் வறண்டு போவதோடு, சுருக்கங்களும் சீக்கிரம் வர வாய்ப்புள்ளது. இதற்குப் பதிலாகப் பட்டுத் துணியால் ஆன தலையணை உறைகளைப் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உராய்வை ஏற்படுத்தாது என்பதால், முகத்தில் கோடுகள் விழுவது தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
பெண்களே சற்று கவனியுங்கள்! இந்த 5 விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம்!
Beauty Tips

இந்த முறைகள் கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருந்தாலும், இவை ஒவ்வொன்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com