'Skin fasting' செய்வது சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Beauty care tips
Skin care routine
Published on

ற்போது உள்ள காலக்கட்டத்தில் எல்லோரும் அழகிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சரும பொலிவு, பளபளப்பு, ஈரப்பதம் போன்றவற்றை தக்க வைக்க தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளைகளும் தவறாமல் ஸ்கின் கேர் ரொட்டீன் செய்கிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக Skin fasting என்னும் முறை ட்ரெண்டாகி வருகிறது. அதாவது நம்முடைய சருமத்திற்கு இந்த ஸ்கின் கேர் ரொட்டீன்களிலே இருந்து தற்காலிகமாக சில வாரங்கள் கொடுக்கப்படும் ஒரு பிரேக் தான் 'ஸ்கின் பாஸ்டிங்' என்பதாகும். அதிகப்படியான Skin care routine செய்வதை சிறிது காலம் நிறுத்திவிடுவதன் மூலம் சருமம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி புத்துயிர் பெறும். இந்த Skin fasting செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Skin fasting பயன்கள்

அதிகமான ஸ்கின் கேர் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தும் போது சருமம் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கும். இயற்கையாக சருமத்தில் உருவாகக்கூடிய எண்ணெய்கள் சருமத்தை மிருதுவாக மாற்றத் தொடங்கும். அதுமட்டுமில்லாமல் சருமத்தில் ஏற்கனவே பயன்படுத்திய க்ரீம்கள் சருமத்திற்கு பாதிப்பு உண்டாக்கும்போது இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலமாக சருமம் Heal ஆகத் தொடங்கும். சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு பிறகு ஸ்கின் கேர் ரொட்டீனை மீண்டும் தொடங்கும்போது அது சருமத்திற்கு நல்ல பலனைத்தரும்.

சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் இந்த முறையை பயன்படுத்தும்போது சரும எரிச்சல் குறையும். சருமத்தில் Retinoids, exfoliants போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்கும். இந்த முறையை செய்யும்போது சருமம் குணமாகத் தொடங்கும்.

Skin fasting எப்படி செய்ய வேண்டும்

Skin fasting ஐ கடைப்பிடிக்கும்போது தண்ணீர் நன்றாக குடித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் மாய்ஸ்டரைசர் மட்டும் பயன்படுத்தலாம். இது சருமம் வறட்சி அடையாமல் தடுக்கும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகள், கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி சருமத்தை தொடுவதை தவிர்க்கவும். இதனால் இன்பெக்ஷன் வராமல் தடுக்கலாம். பொறுமையாக இருங்கள். சருமத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை காண கால அவகாசம் தேவைப்படும். Skin fasting செய்து முடித்த பிறகு சருமத்தில் ஸ்கின் கேர் ரொட்டீனை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரவேண்டும். நம்முடைய சருமம் அதை ஏற்றுக்கொள்ள சிறிது காலநேரம் தேவைப்படும் என்பதை மறக்க வேண்டாம்.

பொதுவாக Skin fasting எல்லோருக்கும் ஏற்ற முறையாகவே கருதப்படுகிறது. இருப்பினும் Eczema, acne போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் நல்ல சரும மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு தொடங்குவது சிறந்தது. 

இதையும் படியுங்கள்:
'ஆக்ஸிலாட்ல்' - நடக்கும் அதிசய மீன் பற்றி தெரியுமா?
Beauty care tips

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com