முகப்பொலிவு மற்றும் தலைமுடிக்கு பயனுள்ள அழகு குறிப்புகள்!

Useful beauty tips
Skin - Hair care tips
Published on

ருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.

வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.

உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் பளபளப்பாக இருக்கும்.

நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க, சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.

எலுமிச்சை பழச்சாறு, பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

பெண்கள் பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்

பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.

இதையும் படியுங்கள்:
யாருக்கு எந்த டைப் சுடிதார் பொருத்தமாக இருக்கும்… இதோ சில டிப்ஸ்!
Useful beauty tips

எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.

அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.

சம அளவு நெல்லிக்காய்சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.

குங்குமப்பூவை பாலேட்டில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எடுத்து நன்றாக பிசைந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறி உதடு சிவப்பாகும்.

சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும்.

-சுந்தரி காந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com