சின்னச் சின்ன அழகு குறிப்புகள்!

சின்னச் சின்ன அழகு குறிப்புகள்!

மிகவும் சுலபமாக, வீட்டு வேலைகளிலேயே தங்களை அழகு படுத்திக் கொள்ளச் சில எளிய வழிகள்.

காப்பிக்குத் தண்ணீர் கொதிக்க வைக்கிறோம் அல்லவா? அந்தத் தண்ணீர் கொதிக்கும்போது ஆவி வருகிறது. உதடுகளை அழுந்தப் பொருத்தி மூடிக் கொண்டு, ஒன்றிரண்டு நிமிடம் முகம் முழுக்க ஆவி படும்படி பிடித்தால் முகத்தில் சருமத்துளை அடைப்புக்கள் நீங்கி, பரு, சிறு கட்டி, கறுப்புப்புள்ளி போன்றவை தோன்றுதலும்,  எண்ணெய் வழிதலும் தடுக்கப்படும். மிக இயல்பான 'ஸ்டீம்பாத்' இது.

எல்லாருக்கும் துணி துவைக்க, பாத்திரம் தேய்க்க. வீடு துடைக்க, வேலைக்காரியை அமர்த்த முடியுமா? விலைவாசியோடு  போட்டி போடுகிறதே வேலைக் காரியின் சம்பளம், டிமாண்ட்கள்...! டிடர்ஜென்ட் சோப், க்ளீனிங் பவுடர் முதலியன உபயோகிப்பதால் நகங்கள் வலுவிழந்து பொலிவிழக்கின்றன. வெதுவெதுப்பான நீரில் உப்புப் போட்டு, கைகளை ஐந்து நிமிடம் ஊற காமத்துக் கொள்ளுங்கள். ஊறும்போதே ஒரு கையால் மறுகையை மஸாஜ் செய்வதுபோல் நீவி விடவும். இரவில் லேசாய் தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் தொட்டு நகங்களுக்குத் தடவலாம்.

வீட்டில் ஒரு பெண் வேலை செய்கைளில் நடக்கிற நடை... அடேயப்பா... ஒரு பாதயாத்திரை  பூரத்தியாகும். குமரி முதல் இமயம் வரை...!  அந்தப் பாதங்களுக்கு சிச்ருஷை செய்ய வேண்டாமா? எவ்வளவு செய்கிறோம்? இன்னும் ஐந்து நிமிடம் பாதங்களுக்காக ஒதுக்கி, இதமான வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து, பாதங்களை அந்த பேசினில் வைத்து, பாதங்களை மஸாஜ் செய்தபடி, வீரல் இடுக்கு, நகங்களைச் சுற்றிய அழுக்கைத் தேய்த்து எடுக்கவும்.

குதிகால் வலிக்கு. ஒரு அரைச் செங்கல்லை சூடுபடுத்தி, அதன் மேல் ஒரு துணியைப் போட்டுத் தேய்க்கவும். கிராமப்புற வாசகிகள் கல்லின்மேல் ஆடுதொடா இலை போட்டு இதமாய் மிதிக்கவும். அதேபோல் மழமழப்பான கூழாங்கல் கொண்டு, பாத ஓரங்களைத் தேய்த்தால் பித்த வெடிப்பில் சொரசொரப்பு நீங்கும். பித்த வெடிப்பில் சமய சந்தர்ப்பம் இல்லாமல் புடவை அடிப்பாகம் மாட்டி. வலிப்பதும், கிழிப்பதும் தடுக்கப்படும்.

பயறு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து அரைத்து. உடம்புக்குப் பூசிக்குளிப்பது மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com