உலகம் முழுவதும் புரட்சி ஏற்படுத்திய அழகு சாதனப் பொருள் நத்தை மியூசின்!

Snail Mucin
Snail Mucinmlmlovevs.live

ழகு மற்றும் அழகு சாதனப்பொருட்கள் என்றதும் நமக்கு முதலில் நியாபாகத்திற்கு வருபவர்கள் தென் கொரியர்கள் தான். உலகம் முழுவதும் அழகு சம்பந்தமான புதிய புரட்சிகளை இவர்களே செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி சமீபமாக இவர்கள் கண்டுப்பிடித்த அழகு சாதனப்பொருள் தான் ஸ்னெயில் மியூசினாகும் (Snail Mucin).

ஸ்னெயில் மியூசின் என்பது நத்தை ஊர்ந்து செல்லும் போது அதிலிருந்து உருவாகும் திரவமாகும். இதுவே நத்தைக்கு உய்வு தன்மையை கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் தரையில் சுலபமாக பயணம் செய்வதற்கு உதவுகிறது. இவை சருமத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஈரப்பதத்துடனும் நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

இந்த நத்தை மியூகஸில் புரதமும் ஆர்கானிக் கெமிக்கலும் இருப்பதால் இதை முகத்தில் தடவும் போது, வயதாகும் தன்மையை குறைத்து முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் அழற்சி போன்ற பிரச்சனைகளை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நத்தையின் மியூகஸை முதலில் பழமையான கிரீஸிலேயே பயன்படுத்தினர். கிரேக்க மருத்துவரான ஹிப்போகிரேட்டஸ் தான் இப்படி நத்தையிலிருந்து வரும் மியூசினை அழகுக்காக பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில்தான் தென்கொரிய அழகு சாதனப்பொருட்களில் இது இடம் பிடித்தது என்று கூறலாம்.

இந்த நத்தையின் மியூசினை தயாரிக்க எந்த நத்தையையும் கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தென் கொரியர்கள் நத்தையின் மியூசினை பயன்படுத்த முக்கிய காரணம், இது கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து கிளாஸ் ஸ்கின்னை அடைய உதவுகிறது.

நத்தைகளை 30 நிமிடங்கள் சுதந்திரமாக நடமாட விடுவதன் மூலம் கிடைக்கும் மியூகஸை திரட்டுவதே செயல்முறையாகும். இதற்காக நத்தைகளை கொடுமைப்படுத்துவது கிடையாது என்றும் கூறப்படுகிறது.

நத்தை மியூசினில் அதிகமாக நியூட்ரியன்ஸ் இருப்பதால் அது சருமத்தை மீளாக்கம் செய்வதற்கும் குணமாக்கு வதற்கும் பயன்படுகிறது. இது கரும்புள்ளிகளும் பிக்மென்டேஷன் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வயிற்றுக் கோளாறுகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?
Snail Mucin

இது உலகம் முழுக்க மிகவும் பிரபலாகி கொண்டிருப்பதற்கு காரணம் கிளேஸ் ஸ்கின் பெறுவதற்கும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் அதிகம் உதவுகிறது  என்பதால்தான். நத்தை மியூசின் சரும கேன்சரைக் கூட குணப்படுத்தும் தன்மை உள்ளது என்று கூறப்படுகிறது.

இது ஸ்னெயில் மியூசின் சீரம், எசென்ஸ், கீரிம் என்று விதவிதமாக சந்தையில் கிடைக்கிறது. இதன் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. எனினும் இளம் வயதினர் அதிகம் வாங்கி பயன்படுத்த ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com