வயிற்றுக் கோளாறுகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

What can be done to prevent stomach upsets?
What can be done to prevent stomach upsets?https://ayurvedham.com

நாம் உட்கொள்ளும் உணவுகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து ஆரோக்கியமானதாக இருந்தபோதிலும் சில நேரங்களில் வயிற்றில் வலி, உப்புசம், இரைச்சல் போன்ற கோளாறுகள் உண்டாகி பிரச்னையாகக் கூடும். இதற்குக் காரணமாக ஒரே உணவை அதிகளவில் உண்பது, ஒவ்வாமை போன்றவற்றைக் கூறலாம். இந்தப் பிரச்னை வராமல் தடுக்க கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

சோடா மற்றும் ஸ்பார்க்லிங் வாட்டர் போன்ற கார்பன் ஏற்றப்பட்ட பானங்களை அருந்தாமல் தவிர்ப்பது நலம். அதிலுள்ள வாயுவானது ஜீரணக் கோளாறை உண்டுபண்ணி வயிற்றில் வீக்கம் ஏற்பட வாய்ப்பளிக்கும்.

அதிகளவு நார்ச்சத்தும் புரோட்டீனும் இருந்தபோதும், பீன்ஸ் மற்றும் சில பருப்பு வகைகளை உண்ணும்போது அவற்றிலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் சில பேருக்கு வாயுவை உற்பத்தி பண்ணி வயிற்றில் உபாதைகளை உண்டு பண்ணும். இவ்வகை உணவுகளை அவர்கள் குறைவாக உட்கொள்ளலாம்.

முட்டைகோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி, ப்ரஸ்ஸெல் ஸ்பிரௌட்ஸ் போன்ற க்ரூசிஃபெரஸ்  காய்கறிகள் அதிகளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டவைகளாக இருந்தபோதும், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்களும் கார்போஹைட்ரேட்களும் வயிறு வீக்கம் போன்ற கோளாறுகளை உண்டுபண்ணக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

லாக்ட்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால் மற்றும் பாலில் தயாரித்த உணவுகளை உண்ணும்போது வயிற்று உபாதைகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது. அவர்கள் அதற்கு மாற்றாக லாக்ட்டோஸ் அல்லாத வேறு உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உசிதம்.

சோடியம் அதிகம் கலந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது, சோடியம், நீருடன் கலந்து வயிற்றில் தங்கி கோளாறுகளை உண்டுபண்ணும். ஆகவே, பதப்படுத்தப்படாத, முழுமையான உணவுகளை உண்பது நலம் தரும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து கசப்பான உண்மைகள்!
What can be done to prevent stomach upsets?

சோர்பிட்டால் (sorbitol) மற்றும் மன்னிட்டால் (mannitol) போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவுகளின் சத்துக்கள் குடலில் சரிவர உறிஞ்சப்படாமல் வயிற்றில் வாய்வு மற்றும் வீக்கம் ஏற்படக் காரணமாகின்றன. அவற்றையும் தவிர்ப்பது பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும்.

எண்ணையில் பொரித்து, அதிக கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகள் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அவற்றுடன் சேர்த்து உண்ணப்படும் சாஸ் போன்றவற்றிலும் சத்துக்கள் அதிகம். இவையெல்லாம் சேர்ந்து அதிக நேரம் வயிற்றுக்குள் தங்கும்போது பசியின்மை, வாய்வு போன்ற அசௌகரியங்கள் உண்டாவது இயற்கையே.

ஃபிரக்டோஸ் (fructose) எனப்படும் ஒரு வகை இனிப்புச் சுவை அதிகம் நிறைந்துள்ள ஆப்பிள், பியர், வாட்டர் மெலன் போன்ற பழங்களை உண்ணும்போதும் சிலருக்கு வயிறு வீக்கமடைவது போன்ற கோளாறு உண்டாவது சகஜம். இவற்றை அளவோடு உண்பது நலம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com