நாம் ஏராளமான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தியிருப்போம். அந்தவகையில் தற்போது வாழை இலை ஃபேஸ் பேக் நன்மைகள் மற்றும் எப்படி பயன்படுத்துவது குறித்துப் பார்ப்போம்.
வாழை இலையில் சாப்பிடுவது தென்னிந்திய மக்களின் பாரம்பரியமான ஒன்றாகும். ஏனெனில், வாழை இலையில் சாப்பிட்டால் அவ்வளவு உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது அறிவியல் உண்மை. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாழை இலை சரும ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் கூட உதவும்.
1. வாழையிலையில் சருமத்தின் அழகைக் கூட்டும் அலட்டாயின் உள்ளதால் இது சருமத்தை பொலிவாக்கும். இதற்கு அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து முகத்தில் தடவலாம்.
2. வாழையிலையை அரைத்து அதன் சாற்றைப் பிழிந்து ஐஸ் கட்டியாக மாற்றி முகத்தில் தடவி வந்தால் சருமம் மென்மையாக மாறும்.
3. வாழை இலையின் விழுதை வெயில் பட்டு பாதிப்பு அடைந்த சருமத்தில் வைத்தால் விரைவில் குணமாகும்.
4. வாழையிலையில் அதிக அளவு காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன.
5. வாழை இலை சாற்றை தலையில் தடவி வந்தால் பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
6. சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
7. மேலும் வாழை இலையிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் கூந்தலுக்கு நல்ல நிறத்தை தருகிறது. வாழை இலை சாற்றை எடுத்து தலையில் மாஸ்க் போட்டு வந்தால் தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்குவதோடு, கூந்தலும் கருமையாக மாறும்.
வாழை இலை இயற்கையாகவே தூய்மையானது என்பதால், நீங்கள் நன்றாக கழுவிதான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒருமுறை நீரை தெளித்துவிட்டு பயன்படுத்தினாலே போதும். இயற்கையாகவே வாழை இலையில் கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்களை தடுக்கும் பண்புகள் உள்ளன. எனவே தான் வாழை இலைகள் எப்பொழுதும் தூய்மையானவை.
வாழை இலை ஃபேஸ் பேக்ஸ்:
1. அரைத்த வாழை இலையுடன் மஞ்சள், தேன், தயிர் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து எடுத்தால், நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
2. வாழை இலை, வெள்ளரிக்காய், கற்றாழை சாறு, லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம்.
3. அரைத்த வாழை இலை பவுடருடன் சந்தன பவுடர், ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிஸரின் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைக்கலாம்.
இந்த மூன்று ஃபேஸ் பேக்குகளும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றும்.