சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!
நடிகை சோஹா அலிகான் தனது முகத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள தினமும் இந்த மூன்று உணவுகளை எடுத்துக்கொள்வாராம். அது என்னென்ன என்று பார்ப்போம்.
நமது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள க்ரீம்கள் பயன்படுத்துவது, இயற்கையான ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவது மட்டும் தீர்வாகாது. இப்படி செய்து வந்தால், அழகாக மட்டுமே இருக்க முடியுமே தவிர முகச்சருமம் ஆரோக்கியமாக (க்ரீம்கள் பயன்படுத்துவது) இருக்குமா என்பது கேள்விக் குறித்தான். அதுவும் இதன்மூலம் கிடைக்கும் அழகானது நிரந்தரமாக இருக்குமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான்.
பின் என்ன செய்வது? நம்முடைய சருமத்தை அழகாக்க க்ரீம்கள் மாஸ்க்ஸ் மட்டும் போதாது, ஆரோக்கியமான ஊட்டச்சத்தும் அவசியமாகும்.
அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகான் தினமும் உட்கொள்ளும் மூன்று உணவுகள் பற்றிப் பார்ப்போம்.
பாதாம் பருப்பு:
தினமும் ஸ்நாக்ஸ் டைமில் ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பை எடுத்து சாப்பிடலாம். இது உடலுக்கும் சருமத்திற்கும் நல்லது. பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. சருமத்தில் பருக்கள் போன்றவை வராமல் தடுப்பதோடு சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்றும். சோஹா அலிகானுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் பாதாமாம்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட்டை துருவி அரைத்து தண்ணீர் சேர்க்காமல் 100 சதவீத பீட்ரூட் ஜூஸை எடுத்து 100 மில்லி அளவு தினமும் குடிக்கிறார் சோஹா அலிகான். ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் நார்ச்சத்துக்களும் இருப்பதால் உடல் ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும். மேலும் இதில் ஆண்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருப்பதால் பருக்கள், கொப்புளங்கள் உண்டாவதைத் தடுக்க முடியும். பீட்ரூட் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யும் என்பதால், இதனை தினமும் எடுத்துக் கொள்வதால் முகச்சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயை அப்படியே அல்லது ஜூஸாக செய்து சாப்பிடலாம். இதில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக சருமத்தில் ப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடி செல்களின் சேதத்தைத் தடுக்கும்.
இந்த மூன்று உணவை நீங்களும் தினமும் எடுத்து வந்தால், இயற்கையாகவே சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.