
1. வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதால் முகம் கறுத்து விடும். இதைத் தடுக்க வெளியில் சென்று வந்த பின் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் குளிக்கலாம் அல்லது முகத்தை மட்டும் கழுவிக் கொள்ளலாம்.
2. செம்பருத்தி இலையை உலரவைத்து மிக்ஸியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப்பொடியை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.
3. மஞ்சள் தூள், சந்தனத்தூள், ஆலீவ் எண்ணெய் கலவையை உடல் முழுவதும் பூசி, பத்து நிமிடங்களுக்கு பிறகு குளிக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு, அல்லது மூன்று தடவை செய்து வர சருமம் மென்மை பெறும்.
4. உடல் அழகை பாதுகாக்க வைட்டமின் ஏ, மற்றும் சி அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. பாலும், எலுமிச்சைப் பழச்சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் ப்ளீச் செய்யலாம்.
6. முகம், கை, கால், கழுத்து போன்ற இடங்களில் பாலை உபயோகித்து மென்மையாக மசாஜ் செய்யலாம். இதனால் சருமம் பளபளப்பாவதுடன் மிருதுவாகவும் இருக்கும்.
7. செம்பருத்தி இலை, பயித்தம் பயறு இவற்றை சம அளவில் எடுத்து நீர் விட்டு அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளக்கும்.
8. சிலருக்கு சருமம் அடிக்கடி உலர்ந்து விடும். இவர்கள் வெயிலில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.
9. தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்திலிருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும்.
10. கடுகு எண்ணெயை உடலில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கடலை மாவு, அல்லது சோப் உபயோகித்துக் குளிக்கவும். இதனால் சருமத்துக்கு மென்மைத்தன்மை கிடைக்கும்.
11. சின்ன வெங்காயத்தை நன்கு வேக வைத்து தயிர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளக்கும்.
12. வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்புச்சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.