
முகம்தான் நம் உடலின் கிரீடம் என்ற நிலையில் முகம் போலவே வெயிலிலும், தூசிகளையும் எதிர்கொள்ள நேரிடும் கைகளையும் அதே அளவுக்கு அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
அலுவலக வேலை, வீட்டு வேலை வரை நாம் செய்யும் பெரும்பாலான வேலைகளை கையாள்வது நம் கைகள்தான்.
கம்யூட்டரில் பணிபுரியும் பெண்கள் முதல் தையல் வேலையில் ஈடுபடும் பெண்கள் முதல் அனைவருக்கும் பலரின் கைகளும் எண்ணெய்ப் பசை இல்லாமல் உலர்ந்துபோய் கரடு முரடாக இருக்கும். வறண்டு, சுருக்கம், அரிப்பு, வெடிப்பு போன்றவைகள் ஏற்படாமல் இருக்க சில எளிய வழிகளை பின்பற்றினால், கைகளை மென்மையாகவும், அழகாகவும் பாதுகாக்கலாம்.
எப்போதும் கிச்சனில் ஹேண்ட் லோஷன் வைத்து பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டு கழுவலாம். பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகள் செய்து முடித்தவுடன் இது மாதிரி செய்தால் கைகள் மென்மையாகும்.
இரவு உறங்கச் செல்லும் முன்பு சிறிது உப்பு எடுத்து இரு கைகளிலும் படுமாறு தேய்த்துக் கழுவிவிட்டு, ஈரம் போக துடைத்து விட்டு லோஷன் தடவி வர கைகள் மென்மையாகும்.
வாரம் ஒருநாள் வெதுவெதுப்பான நீரில் சிறிது அளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் கைகளை நன்றாக துடைத்து விட்டு மாய்சரைசர் கிரீம் தடவலாம்.
தினமும் இரவில் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கைகளை நன்றாக மசாஜ் செய்யவேண்டும். அப்படி செய்தால் வறட்சி நீங்கி மிகவும் சொர சொரப்பாக இருக்கும் கைகளுக்கு வாசலின் சேர்த்து தடவினால் இரவு முழுதும் கைகள் மென்மையாக இருக்கும்.
கைகளை தேங்காய் எண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம். கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து விரல் முடியும்வரை மெதுவாக சக்கர வட்டமாக தேய்த்துவிட்டு இப்படி எல்லா விரல்களையும் செய்யவேண்டும். விரலுக்கு இடையே உள்ள தசைப் பகுதியில் பிறகு மெதுவாக மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். மாதம் இருமுறை இப்படி செய்தால் மென்மையாகும்.
அரை கப் தண்ணீரில் கால் கப் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் இரவில் கைகளில் பூசி சில நிமிடங்கள் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் போதும் கைகள் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் சமஅளவு கிளிசரின் கலந்து கைகளில் தடவி ஊறவைத்து பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் கைகள் மென்மையாகும்.
தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் கிளிசரின் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து பசைபோல ஆக்கி தினமும் இரவில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கைகளில் பூசிக்கொண்டு பத்து நிமிடங்களுக்கு பின்கழுவி வந்தால் கைகள் மென்மையாகும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சில துளிகள் தேன் கலந்து கைகளில் பூசி மிருதுவாக மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவினால் கைகள் மென்மையாக ஆகும்.
ஒரு டீஸ்பூன் கிளிஸரின், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் 5 சொட்டு பன்னீர் கலந்து தினமும் இரவில் கைகளில் பூசி ஊறவைத்து பின் கழுவி வந்தால் கைகள் மென்மையாகும்.
ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய், சிறிது எலுமிச்சை ஜூஸ் எல்லாவற்றையும் கலந்து கைகளில் பூசி மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கைகள் மென்மையாகும்.