அக்னி நட்சத்திர வெயிலுக்கு இயற்கையான சில அழகு டிப்ஸ்கள்!

facial---
facial---Image credit - pixabay.com
Published on

க்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நாம் இயற்கையான பொருட்களை வைத்து நம் உடல் அழகை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

வெந்தயத்தை இரவே ஊறவைத்து மறுநாள் அரைத்து தலையில் தடவி ஊறிய பிறகு குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

நன்கு பழுத்த இரண்டு வெள்ளரிபழங்களை சுத்தமாக அலம்பி சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். ஜூஸை வடிகட்டி விட்டு ஐஸ் சேர்த்தோ சேர்க்காமலோ தேவையான அளவு மிளகுத்தூள்  சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் மேனியும் நிறமும் கூடும் பளபளப்பு கொடுக்கும் கோடைக்கு உடலில் வறட்சியும் ஏற்படாது.

ஒரு கோப்பை பச்சை பாசிப்பருப்பு பவுடர்  நாலு தேக்கரண்டி மஞ்சள் பொடி நாலு தேக்கரண்டி சந்தன பொடி இவற்றை நன்றாக கலந்து அதனுடன் ரோஸ்ட் வாட்டர் மற்றும் பால் சேர்க்க வேண்டும் இதை குளிப்பதற்கு முன் உடலில் தேய்த்து குளித்தால் சோப்பு தேவையில்லை உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதோடு உடலும் மின்னும்.

துளசி சந்தனம் வேம்பு மஞ்சள் ஆகியவற்றை அரைத்து உடலில் பூசி வர வேனல் கட்டிகள் மறையும் சருமம் மிருதுவாகும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு கலந்து உடம்புக்கு தடவி பிறகு பயத்த மாவு தேய்த்து குளித்தால் உடம்பு பளபளப்பாகவும் மிருதுவாகவும் சுருக்கங்கள் இல்லாமல் வேர்க்குரு தொல்லை இல்லாமல் இருக்கும்.

கோடையில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காற்றில் பறக்கும் புழுதி அழுக்கு அல்லது தூசி போன்றவை எண்ணெய் சுரப்பு மிக்க சருமத்தில் அப்படியே படிந்து விடும். நல்ல தரமான ஆயுர்வேத சோப்புக்கொண்டு சருமத்தை அடிக்கடி கழுவ வேண்டும். கொழுப்பு கலக்காது கிளீன் சிங்க் மில்க் அல்லது லோஷனையும் பயன்படுத்தலாம்

செம்பருத்தி இலையை பறித்து நன்கு அலசி துடைத்து ஷாம்பு போல நைசாக அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு குளித்தால் கோடையில் தலை சூடு ஏற்பட்டால் தணிந்து விடும்.

facial...
facial...Image credit - idiva.com

அரைத்த சந்தனத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து அதை வெதுவெதுப்பான நிலையில் உடலில் தேய்த்துக் கொண்டு குளிர்ந்த நீரில் குளித்தால் மேனி பளபளக்கும் கோடை வெப்பத்திற்கு  குளுகுளுவென்று இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!
facial---

கோடையில் ஏற்படும் வெப்பத்தால் முகம் வறண்டு காணப்படும் இதை தடுக்க வாழைப்பழத்தை கூழ் போல பிசைந்து ஒரு ஸ்பூன் தண்ணீர் இரண்டு சொட்டு கிளிசரின் கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். இந்த கூழை முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து விட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் வறண்ட தன்மை நீங்கி முகம் வசீகரமாக இருக்கும்.

கோடையில் தர்பூசணி பழத்தின் சதையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சோப்பு போடாமல் குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com