Natural facial
Natural facial

இயற்கை ஃபேஷியல்: கோடைக்கால சரும பிரச்சனைகளுக்கு இனி குட்பை சொல்லுங்கள்!

Published on

கோடை காலத்தில் சருமம் அதிக வெப்பம், வியர்வை, மாசு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது. இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க, இயற்கையான முறையில் ஃபேஷியல்கள் செய்வது சிறந்தது. கோடை காலத்தில் வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சில இயற்கை ஃபேஷியல்களைப் இந்தப் பதிவில் காணலாம்.

வெந்தயமும், நன்னாரியும் உள்ளங்கை அளவு எடுத்து கழுவி விட்டு முந்தின நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் இதனுடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய வைத்து பொடியாக்கிய எலுமிச்சைதோல் செஞ்சந்தனம் இவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து பாசிப்பருப்பு மாவு போட்டு முகத்தை கழுவ வேண்டும் முகப்பரு, உஷ்ணக் கட்டிகள், கருவளையம், முக வறட்சி என அனைத்தும் நீங்கி முகத்திற்கு பொலிவு கிடைக்கும்.

ஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன், சந்தன பொடி ஒரு டீஸ்பூன், வசம்பு பொடி ஒரு டீஸ்பூன் எல்லாவற்றையும் பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவுடன் திகழும்.

தோல் நீக்காத முழு பச்சை பயிறு இரண்டு டீஸ்பூன் நடுநரம்பு நீக்கிய எலுமிச்சை இலை, இரண்டு வேப்பிலை ஒரு கைப்பிடி துளசி நான்கு, பூலான் கிழங்கு ஒன்று, ரோஜா மொட்டு ரெண்டு, கசகசா அரை ஸ்பூன் இவற்றை அளவான தயிரில் முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் அரைத்து பசை போல ஆக்க வேண்டும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு அலம்பினால் முகம் மிருதுவாகி பளபளவென மின்னும்.

பாசிப்பருப்பு 1/4 கிலோ, கசகசா 10 கிராம், பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம் இவை எல்லாவற்றையும் நன்றாக காய வைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இந்த பவுடரில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் தடவ வேண்டும். அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளவென மின்னும் இது ஒரு அற்புதமான ஃபேஷியலாகஇருக்கும்.

யிர் அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு ஒரு டீஸ்பூன், கேரட் சாறு ஒரு  டீஸ்பூன் எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். முகத்திற்கு நிறமும் பளபளப்பும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பொடுகுத்தொல்லை அறவே போய்விடுமா எப்படி?
Natural facial
logo
Kalki Online
kalkionline.com