
ஒரு கப் தர்பூசணி பழச்சாற்றுடன் அரைக்கரண்டி கடலைமாவைச் சேர்த்துக்குழைத்து முகத்தில் பூசி, அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள். வாரத்துக்கு மூன்று முறை இப்படிச் செய்து வர முகம் பளபளக்கும்.
பொன்னாங்கண்ணிக் கீரை வேகவைத்த நீரை பொறுக்கும் சூட்டில் பத்து நிமிடங்கள் கால் அலம்பினால் பாதங்கள் பளிச்சென்று மிளிரும்.
நெல்லிக்காயை பாலில் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொதிக்கவைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
முழங்கையில் கருமை ஏற்பட்டால், எலுமிச்சைப் பழச்சாற்றை பூசி வர நாளடைவில் கருமை மறைந்துவிடும்.
ஒரு கப் தேங்காய் எண்ணையுடன் ஐந்து செம்பருத்திப் பூக்களை போட்டு நன்றாக சூடாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிய அளவுள்ள கற்பூரத்தைப் போட்டு குளிர்ந்த பின் இந்தக் கலவையை தலைக்குத் தேய்த்துக்குளிக்கவும். மாதம் ஒரு முறையோ, அல்லது இருமுறையோ இப்படிச் செய்துவர இளநரை குறையும்.
தேங்காய்ப்பாலை முகம், கை, கால் கழுத்து போன்ற பகுதிகளில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு உடலும் ஜொலிக்கும்.
பருமனாக இருப்பவர்கள் கொழுப்பு உள்ள பால் சாப்பிடுவதைத்தவிர்க்க வேண்டும். அதேவேளையில் ஆடை நீக்கிய பால், காய்கறி சூப் போன்றவற்றைப் பருகினால் பலன் கிடைக்கும்.
இரண்டு டீஸ்பூன் தயிருடன் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொள்ளவும். பின் இந்தக் கலவையை நன்கு தலையில் தேய்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு அலசவும். வாரம் இருமுறை இது போல செய்துவர முடி உதிர்வு குறையும்.
பப்பாளிக்காயை கூட்டு, பொரியல் என சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
கனிந்த சப்போட்டாப் பழத்தைப் பசும்பாலுடன் சேர்த்து மசித்து முகத்தில் தடவி அது காய்ந்த பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
உதட்டில் வரக்கூடிய வெடிப்பைத் தவிர்க்க நல்லெண்ணெய், வெண்ணெய், நெய் போன்ற வற்றில் எதையாவது ஒன்றை பூசலாம். கேரட் சாறு, பீட்ரூட் சாறுகளை பூசினாலும் பலன் கிடைக்கும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களை சுற்றி பற்று போட்டால், நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.