வெவ்வேறு ஜெல், எக்ஸ்ஃபோலியேஷன் பேக்குகள் மற்றும் AHAமாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஊட்டச்சத்து பெற்று ஹைட்ரேட் செய்யும்போது அதிகப்படியான எண்ணெயை அகற்றிவிடும்.
பாடி கிராஃப்ட் சலோன் மற்றும் ஸ்பாவில் வழங்கப்படும் ஃபிலிக் ஃபேஸ் கிளீன் அப் ஆக்னே எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது.
ஆயில் பிளாட்டிங் பேப்பர் முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெயை எடுத்துவிடும்.
அரிசி மாவு, ஓட்ஸ் பவுடர் எடுத்துக் கொண்டு அதை மோர் சேர்த்து கலந்து பேக் ஆக போட்டு பின் கழுவ பிசுபிசுப்பு நீங்கி, மேக்கப் போட்டாலும் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
முல்தானி மிட்டியுடன் பன்னீர், சந்தனம் சேர்த்து பேக் ஆக்கி போடலாம். ஹைட்ரோ மெடி ஃபேஷியல் நல்ல பலனைத் தரும்.
வீட்டிலேயே எளிமையாக ஆவாரம் பூவை ஊறவைத்த தண்ணீரில் முகம் கழுவி துண்டால் ஒற்றி எடுத்தால் எண்ணைய் வழியாது.
இரும்புச்சத்து, செலினியம், மெக்னீசியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். தலைமுடியை ஆரோக்யமாக பராமரிக்க முகம் எண்ணெய் பசை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும்.
ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை கழுவி சருமத்தின் பி ஹெச் அளவை பராமரிக்கலாம்.
முகத்தில் வடியும் எண்ணையை சல்பேட் இல்லாத கிளென்சர் கொண்டு கழுவலாம்.
களிமண்ணை மாஸ்க் செய்து வாரத்துக்கு ஒருமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிட அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் தங்குவதை குறைக்கலாம்.
ஆயில் இல்லாத சருமத்தில் துளைகளை ஏற்படுத்தாத வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதால் பராமரிப்பு ஹைட்ரேஷன் அல்லது அழகு சாதன கிரீம்களை பயன்படுத்தலாம்.
தயிர், எலுமிச்சைசாறு தேனை கலந்து சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவிட எண்ணெய் உறிஞ்சுவதுடன் சருமத்தில் உள்ள துளைகள் அடைபட உதவும்.
காய்கறிகள், பழங்கள், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள சரும ஆரோக்கியம் மேம்படும்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற எக்ஸ்போலியேசனை பயன்படுத்துவதால் இறந்த சரும செல்கள் நீங்குவதுடன் சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும்.
அதிகப்படியான எண்ணெய் வழிவதை தடுக்க ஆயில் இல்லாத மேக்கப், ஆயில் இல்லாத அழகுசாதன பொருட்கள் உபயோகிக்க சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
அதிக அளவில் தண்ணீர் அருந்துவதால் சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படும்.
கற்றாழை ஜெல்லை தடவி கழுவிட எண்ணெய் வழிவது குறையும்.
பாதாமை பேஸ்ட் ஆகக் கரைத்து அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ முகம் எண்ணெய் பசை குறைந்து பளபளப்பாக இருக்கும்.
கடலைமாவு கொண்டு கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.