குட்டைப் பெண்களுக்கான சில ஸ்டைலிங் டிப்ஸ்!
உயரம் என்பது பெண்களின் அழகைத் தீர்மானிக்கும் ஒரே அளவுகோல் அல்ல. சரியான ஆடை மற்றும் ஆபரணங்களைத் தேர்வு செய்வதன் மூலம் குட்டையாக இருக்கும் பெண்களும் மிகவும் ஸ்டைலாகவும், நம்பிக்கையுடனும் தோற்றமளிக்க முடியும். இந்தப் பதிவில் குட்டையாக இருக்கும் பெண்களுக்கான சில பயனுள்ள ஸ்டைலிங் டிப்ஸ் சிலவற்றைப் பார்க்கலாம்.
உடல் விகிதத்தை சமநிலைப்படுத்துங்கள்: அதாவது தலை முதல் கால் வரை ஒரே நிறத்தில் ஆடை அணிவது உடலை நீளமாகக் காட்டும். கருப்பு, நேவி போன்ற அடர் நிறங்கள் குறிப்பாக குட்டையாக இருக்கும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குட்டையான பெண்கள் சரியான அளவில் இருக்கும் ஆபரணங்களை தேர்வு செய்வது நல்லது. பெரிய ஆபரணங்கள் உங்களை மேலும் குட்டையாகக் காட்டும்.
சரியான ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்: பக்கவாட்டில் கோடு இருக்கும்படியான உடைகள் உங்களை குட்டையாகக் காட்டலாம். அதற்கு பதிலாக நேராக கோடுகள் இருக்கும் உடைகள் அணிவது உங்களது தோற்றத்தை உயரமாகக் காட்டும். ஷார்ட்ஸ், ஸ்கர்ட் அல்லது அங்கிள் லென்த் பேண்ட் போன்ற கால்கள் தெரியும்படியான ஆடைகள் அணிவது உங்கள் கால்களை நீளமாகக் காட்டும்.
சரியான காலனி: ஹீல் காலணிகள் உங்கள் உயரத்தை அதிகரித்து உங்கள் கால்களை நீளமாகக் காட்டும். ஆனால், உயரமான ஹீல்களை அணிவது சிரமமாக இருக்கும். எனவே, உங்களுக்கு வசதியான உயரத்தில் ஹீல்களை தேர்வு செய்யவும். அல்லது அங்கிள் லென்த் பூட்ஸ் அணிவது உங்கள் உடலை சமநிலைப்படுத்தி கால்களை நீளமாகக் காட்டும்.
கூடுதல் டிப்ஸ்: உங்கள் முகத்தை சிறப்பாகக் காட்டும் வகையில் முடியை ஸ்டைல் செய்யவும். லேயர் கட், சைடு பார்ட் போன்ற ஸ்டைல்கள் உங்கள் முகத்தை நீளமாகக் காட்டும். உங்கள் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேக்கப் செய்யவும். இது உங்கள் முகத்தை சிறப்பாகக் காட்டி உங்கள் உயரத்தை மறக்கடிக்கும். எந்த உடையை அணிந்தாலும் நம்பிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் இருக்கும் போது நீங்கள் எப்போதும் அழகாகவே இருப்பீர்கள்.
எப்போதுமே குட்டையாக இருப்பதை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப சரியான ஆடைகளைத் தேர்வு செய்து, ஸ்டைலிங் செய்வதன் மூலம் நீங்கள் எப்போதும் அழகாகவே இருக்கலாம்.