கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!

Summer Skin Care.
Summer Skin Care.

இந்த வெயிலில் அடிக்கடி வெளியில் சென்று விட்டு வந்தால் தோலின் நிறம் பாதிக்கப்படும். அவற்றை சரியான முறையில் பராமரிப்பதற்கு உள்ள வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.

பச்சைப் பயிறு 250 கிராம் ,கடலைப்பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் ,ஆவாரம் பூ 100 கிராம், ரோஜா இதழ் 150 கிராம் ஆகியவற்றை வாங்கி ஆவாரம் பூவை சுத்தம் செய்து காய வைத்து மற்ற பொருட்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

இந்த மூலிகைப் பொடியை தயார் செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் தினமும் பயன்படுத்தி பயன் பெறலாம். குளிப்பதற்கு மற்றும் வெயிலில் சென்று விட்டு வந்தவுடன் அதிகமாக வெயில் படும் இடங்களில், ஊற வைத்துக் கழுவுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடலைப்பருப்பு 250 கிராம், பச்சை பயிறு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம் இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதில் சில துளிகள் தேனை கலந்து முகம், கை ,கால் ,கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து ஊற வைத்து பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்துக் கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதுமாகும்.

தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும். அவ்வப்போது வெண்ணெய் கலந்த மோரைக் குடித்து வந்தாலும் தோல் பளபளப்பாக இருக்கும்.

வெயிலில் வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்ட் கிரீமையும் பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது.

இதையும் படியுங்கள்:
கம்ப்யூட்டர், லேப்டாப்புகளில் நைட் மோட் (மஞ்சள் விளக்கு) பற்றி தெரியுமா?
Summer Skin Care.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து உடலில் தடவி ஊறிய பின் மிதச்சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும் மென்மையாக பட்டு போலும் ஆகும்.

பாதாம் எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ,ஊற வைத்த பின் குளியல் பொடி தேய்த்து குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.

இதுபோல் எளிமையான முறையை பயன்படுத்தி தோலின் நிறம் சுருங்காமலும், வறட்சி ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com