
அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள், அதிக எண்ணெய் தன்மைகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும்.
பப்பாளி பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவுடனும், பளபளப்பு தன்மையுடனும் இருக்கும்.
முகம் பளபளப்பாக மாற புதினாசாறு, எலுமிச்சைசாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் அழகாக மாறும்.
அன்றாடம் சீரகத் தண்ணீர் அருந்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைவதோடு, மீண்டும் பருக்கள் வராமலும் தடுக்கும்.
பன்னீரோடு சந்தனம் கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு தழும்புகள் மறையும்.
இரவு ஊறவைத்த வெந்தயத்தை காலையில் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.
தக்காளி, வெள்ளரிக்காய் இந்த இரண்டையும் அரைத்து, அதோடு முல்தானி மிட்டி கலந்து முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.
குளிர்ந்த நீர் மற்றும் பால் சேர்த்து அதை ஒரு துணியில் தொட்டு, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.
அடர்த்தியாக கண் புருவம் வளர வேண்டுமா? இதோ டிப்ஸ்!
மனிதர்கள் முகபாவங்களைக் காட்டுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் புருவங்கள் உதவிகரமாக உள்ளது. மேலும் தூசு, வியர்வை போன்ற பொருட்கள் கண்குழிகளுக்குள் எளிதில் விழாமல் தடுக்க புருவங்கள் உதவுகின்றன.அப்படிப்பட்ட புருவம் ஒரு சிலருக்கு மிக மெல்லியதாக காணப்படும்.
அடர்த்தியாக்கிகொள்ள பல்வேறு சிகிச்சைகளை அவர்களும் மேற்கொள்வார்கள். இயற்கையான பொருட்களை கொண்டே புருவத்தினை அடர்த்தியாக்கி கொள்ளலாம். விளக்கெண்ணெயை கண் புருவத்தில் தினமும் இரவு வைத்துக்கொண்டால் புருவம் அடர்த்தியாக வளரும். பெரிய வெங்காயத்தை நறுக்கி அதை நன்கு அரைத்து, அந்த சாற்றை கண் புருவத்தில் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
பல்வேறு சத்துக்கள் நிறைந்த கற்றாழையை கண் புருவத்தில் தடவி வந்தால் அடர்த்தியான புருவத்தை விரைவில் பெறலாம்.
சரும வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உதவும் என்பதால், கண் புருவத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் அடர்த்தியாக வளரும்.
முட்டையின் மஞ்சள்கரு அல்லது ஆலிவ் ஆயிலை கண் புருவத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கண் புருவம் அடர்த்தியாக வளரும். மேலும், வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை கண் புருவத்தில் தடவி வந்தாலும் அடர்த்தியாக வளரும்.