சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்துக்கொண்டால் தழும்புகளை போக்கலாம். இளம் வெயில் சருமத்தில் படுமாறு தினம் சிறிது நேரம் நிற்க உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். அது சரும அலர்ஜி, தழும்புகளை போக்கும்.
வைட்டமின் ஈ தழும்புகளை போக்கவல்லது. வைட்டமின் ஈ கலந்த கிரீம் அல்லது எண்ணெயை எடுத்து மிருதுவாக சருமத்தில் மசாஜ் செய்து தடவிவர தழும்புகள் மறையும்.
ரெடினால் அமிலம் என்று கேட்டால் மருந்துக் கடைகளில் கிடைக்கும். வைட்டமின் ஈ போலவே, பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்யும். மருத்துவரின் ஆலோசனைபடி இதை உபயோகிக்க பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.
லாவண்டர், பாதாம், எலுமிச்சை போன்றவை கலந்த எண்ணைய்கள் சருமத்தின் மீள் தன்மையை தக்கவைக்க உதவும்.
தினமும் குளித்து பின் பாடிலோஷனை தழும்புகள், வடுக்கள் உள்ள இடத்தில் தடவிவர தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
திருநீற்று பச்சிலை சாற்றினை தழும்புகள், பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர தழும்புகள் மறையும்.
குப்பை மேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள், வந்த பள்ளங்கள், தழும்புகளை போக்கும்
தேங்காய் எண்ணெய் பூசி பின் குளித்து வர சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள், சுருக்கங்கள் நீங்கும். சரும கலரை மாற்றி பொலிவைத் தரும்.
தீக்காயங்களால் உண்டான தழும்புகளை தேங்காய் எண்ணெய் நீக்கும். பாடி லோஷனை தடவி வர தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு இருக்கும்.
சந்தனம், மஞ்சள் கலந்த பேக் ஐ போடுவதன் மூலம் தழும்புகள் வடுக்கள் மாறும்.
தக்காளிசாறு 2டீஸ்பூன், ஜாதிக்காய் தூள் 1டீஸ்பூன், மஞ்சள் தூள்_1டீஸ்பூன் கலந்து முகத்தில், தழும்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.
அரோமா ஆயில், எசென்சியல் ஆயில் ஆகியவற்றை உபயோகிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ரெகுலராக கிளிசரின் தடவி வர கரும்புள்ளிகள், பருக்கள் வந்த தழும்புகள் மறைய வைக்கும். தகுந்த மாய்ஸ்சுரைசர் தடவி வர தழும்புகள் போகும்.