முடி உதிர்வைத் தடுக்க உதவும் அன்னாசிப் பூ!

Star anise
Star anise
Published on

அன்னாசிப் பூ, அதன் மணம் மற்றும் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்களுக்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறைந்துள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்வைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இந்த கட்டுரையில், அன்னாசி பூவை முடி உதிர்வுக்கு எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

அன்னாசிப் பூ என்பது பண்டைய சீன காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாப் பொருள். இது தனது நட்சத்திர வடிவத்தாலும், மணம் கமழும் சுவையாலும் அடையாளம் காணப்படுகிறது. அன்னாசி பூவில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பாக வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் சி என்பது கொலாஜன் உற்பத்திக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து. கொலாஜன் என்பது தோல், முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு புரதம்.

அன்னாசி பூ முடிக்கு கொடுக்கும் நன்மைகள்: 

அன்னாசி பூவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுத்து, முடி உதிர்வை குறைக்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டம் அளித்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

அன்னாசி பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியை குறைத்து, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கிறது. இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடியை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது. மேலும், அன்னாசி பூவின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகுப் பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் முதன் முதலில் முடி காணிக்கை செய்தது யார் தெரியுமா?
Star anise

அன்னாசி பூவை முடியில் எப்படி பயன்படுத்துவது?

  • அன்னாசி பூ எண்ணெய்: அன்னாசி பூ எண்ணெயை தலைமுடியில் மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முடி வேர்களை ஊட்டமளித்து, முடி உதிர்வை தடுக்கிறது.

  • அன்னாசி பூ பேக்: அன்னாசி பூ பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெயுடன் கலந்து பேக் போல தலைமுடியில் தடவினால், முடி உதிர்வு குறையுடன், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

  • அன்னாசி பூ ஷாம்பூ: அன்னாசி பூ சேர்த்து தயாரிக்கப்பட்ட ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம், முடியை ஆரோக்கியமாக வைத்துகொள்ளலாம்.

அன்னாசி பூ என்பது இயற்கையான முறையில் முடி உதிர்வை தடுக்க உதவும் ஒரு சிறந்த பொருள். இதில் உள்ள பல்வேறு சத்துக்கள் மற்றும் பண்புகள் முடியை ஆரோக்கியமாக வைத்து, அதன் அழகை மேம்படுத்துகின்றன. எனவே, இதன் அற்புதத்தை உணர்ந்து முறையாகப் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com