திருப்பதியில் முதன் முதலில் முடி காணிக்கை செய்தது யார் தெரியுமா?

Tirupati hair offering
Tirupati hair offering
Published on

திருப்பதி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று லட்டு, இன்னொன்று மொட்டைப் போடுதல். இப்படி திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் வெகுகாலமாகவே இருந்து வருகிறது. அந்த வழக்கம் எப்படித் தொடங்கியது? யார் திருப்பதி பெருமாளுக்கு முதல் முதலில் முடி காணிக்கை செய்தது? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு சமயம் நீலாதேவி என்கிற மலை இளவரசி பெருமாளின் மகிமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக திருப்பதி திருமலைக்கு வந்தார். அந்நேரம் பார்த்து அங்கே பெருமாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தலைமுடி காற்றில் லேசாகக் களைகிறது.

முன்பு ஒரு சமயம் பெருமாளுக்காக பால் சுரந்த பசுவின் உரிமையாளர் பசு பெருமாளுக்குதான் தனது பாலை சுரந்திருக்கிறது என்று தெரியாமல் அதைத் தாக்க தனது கையில் இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு எறிகிறான். அது தவறுதலாக பெருமாளின் தலையில் பட்டு அவருக்கு காயம் ஏற்படுகிறது. இதனால் பெருமாளின் கேசம் சிறிது சிதைந்து விடுகிறது.

இதைப் பார்த்ததும் நீலா அவளுடைய தலை முடியை வேரோடு பிடிங்கி பெருமாளின் தலையிலே வைத்து விடுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த பெருமாள் நீலாவிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்கிறார்.

அதற்கு நீலா, ‘தங்களுக்கு முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்லருள் தர வேண்டும்’ என்று கேட்கிறார். தனக்காக எதுவும் கேட்காத நீலாவின் தூய பக்தியில் மேலும் மகிழ்ந்த பெருமாள் அந்த வரத்தை நீலாவிற்கு அப்படியே கொடுக்கிறார். இப்படித்தான் திருப்பதியில் முடி காணிக்கை வழக்கமாக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
திருப்பதியில் சிவன் கோவில் எப்படி வந்தது என்ற கதை தெரியுமா?
Tirupati hair offering

நம் அழகுக்கு மிகவும் முக்கியப் பங்கு வகிப்பது கூந்தல்தான். அந்தக் கூந்தலை பெருமாளுக்குக் காணிக்கையாக கொடுக்கும் போது, அது பெருமாளின் மீது பக்தர்கள் வைத்திருக்கும் பக்தியை காட்டுகிறது. முடி காணிக்கை கொடுக்கும்பொழுது ஒருவருடைய பாவம் மற்றும் அகந்தை நீங்குவதாக சொல்லப்படுகிறது. வருடம் முழுவதும் எண்ணற்ற பக்தர்கள் திருப்பதிக்கு வந்து பெருமாளை நினைத்து முடி காணிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com