கோடைக்கால பேஷன் ரகசியங்கள்: லூஸ் ஃபிட் ஆடைகள் மூலம் வெயிலில் கூட குளிர்ச்சியாக இருப்பது எப்படி?

ஓவர்சைஸ் சட்டை, பலாசோ பேன்ட், பருத்தி உள்ளாடை, லைட் ஜுவல்லரி, வெட்டிவேர் நீர் போன்ற எளிய மாற்றங்கள் மூலம் வெயிலில் கூட குளிர்ச்சியாக இருக்க உதவும் வழிகள்
summer-fashion tips
summer-fashion tips
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

கோடை வெயிலில் எந்த உடை உடுத்தினாலும் வேர்க்கிறது என்பதுதான் பொதுவாக அனைவரின் கூற்றாக உள்ளது. அந்த வகையில் ஸ்டைலாகவும் வேர்க்காமலும் இருக்கும் பேஷன் ரகசியங்களையும் சூப்பர் ஐடியாக்களையும் இப்பதிவில் காண்போம்.

நிறம் முக்கியம்

கருப்பு நிறம் சூரிய ஒளியை ஈர்த்து அதிக வெப்பத்தை கொடுத்து உடலில் வியர்வையை உண்டாக்கும் என்பதால் கோடை காலத்தில் கருப்பு நிறத்தை தவிர்ப்பது நல்லதுசூரிய ஒளியை வெள்ளை நிறம் பிரதிபலிக்கும் என்றாலும் இளஞ்சிவப்பு (Powder Pink), வெளிர் நீலம் (Sky Blue) மற்றும் புதினா பச்சை (Mint Green) போன்ற 'பேஸ்டல்' (Pastel) நிறங்கள் கண்களுக்கும், உடலுக்கும் அதிக குளிர்ச்சியைத் தரும். மேலும் வெப்பத்தை உள்வாங்காத பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் வெளிர் மஞ்சள் நிறம் கோடைக்கேற்ற சிறந்த நிறமாகும்.

தேவை துணி ரகத்தில் கவனம்

பருத்தித் துணிகள் கோடைக்கு சிறந்த தேர்வு என்றாலும் இயற்கையிலேயே காற்றோட்டமான 'லினன்' (Linen) ரக ஆடைகளை கோடையில் அணிவது நல்லது. ஏனெனில் இவை உடனடியாக வியர்வையை உறிஞ்சி உலர்வாக உடலை வைத்திருப்பதோடு சிறிது சுருக்கம் விழுந்தாலும் தனி ஸ்டைலாக காட்சி தரும்.

இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புத்திறன் மற்றும் வியர்வை வாடையை தடுக்கும் 'மூங்கில் துணி' (Bamboo Fabric) தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இது கோடை வெயிலுக்கு ஏற்ப உடலுக்கு இதமாகவும் பார்ப்பவர் களுக்கு ஸ்டைலாகவும் காட்சி தரும்.

உடலுக்கு மென்மையான உணர்வைத் தரும் 'முல்முல்' (Mulmul) ரகங்கள் கோடை காலத்திற்கேற்ற சிறந்த ஆடை ரகங்களில் ஒன்றாக உள்ளது.

லூஸ் ஃபிட் (Loose Fit)

கோடைகாலத்தில் இறுக்கமாக இருக்கும் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணியாமல் காற்றோட்டமாக இருக்கும் 'ஓவர்சைஸ்' (Oversized) சட்டைகள் மற்றும் 'பலாசோ' (Palazzo) பேன்ட்களைத் தேர்வு செய்து அணிவதால் ஆடைக்கும் சருமத்திற்கும் இடையில் காற்றோட்டம் அதிகரித்து உடல் சூடாகாமல் தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
கோடையில் உங்கள் சருமம் பொலிவிழக்கிறதா? இந்த இயற்கை டிப்ஸை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!
summer-fashion tips

கோடைகாலத்தில் உள்ளாடைகள் சித்தடிக் ரகங்களாக இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு பருத்தி ஆடைகளை அணிவதால் கோடைகால சரும பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் சரும எரிச்சலை தடுக்க கனமான நகைகளை தவிர்ப்பதோடு மரம் மற்றும் துணையினாலான (Fabric Jewelry) நகைகளை அணிவது நல்லது.

கோடைகாலத்தில் துணிகளை துவைக்கும் போது கடைசியாக அலசும் நீரில் வெட்டிவேர் ஊறவைத்த நீர் சில துளிகளோ அல்லது புதினா ஆயில் (Peppermint oil) சேர்த்தோ அலசினால் குளிர்ச்சியுடன் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com