வேர்வை வந்தாலும் மேக்கப் கலையாது: நிபுணர்கள் கூறும் கோடைக்கால அழகு குறிப்புகள்!

summer-makeup-tips
summer-makeup-tips
Updated on

சுட்டெரிக்கும் வெயில்... முகத்திலடிக்கும் உஷ்ணக்காற்று.... உங்கள் முகத்தின் மேக்கப் கலையாமலிருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

பகல் நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்ப வேண்டிய அவசியமிருக்கும் பெண்களே... உங்கள் முகத்தின் மேக்கப் கலையாமலிருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய எட்டு வழிமுறைகள் இதோ...

உஷ்ணக் காற்றின் தாக்குதலால் உலர்ந்து போயிருக்கும் முகத்தின் சருமத்தில் அப்படியே நேரடியாக மேக்கப் போட ஆரம்பிக்க வேண்டாம். ஒரு நிமிட நேரம் ஒதுக்கி முகத்தை குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த காற்றில் ஈரப்பதம் கலந்து மெல்லிய பனியாக

உருவாக்கி (chilled mist) அதன் மூலம் முகத்தைக் கழுவவும். இது முகத்திலிருந்து உடனடியாக வேர்வை வெளியாவதைத் தடுக்கும். முகத்தில் போடும் மேக்கப் நீண்ட நேரம் கலையாமலிருக்கவும் உதவும்.

குளிர் காலத்தில் நீங்கள் பயன்படுத்தும்

மாய்ஸ்ச்சரைஸர் மிகவும் ஹெவியானதாக இருக்கும். வெயில் காலத்திலும் தொடர்ந்து அதையே உபயோகிக்காமல், ஜெல்லை அடிப்படையாகக் கொண்டு, கனமில்லாததாக தயாரிக்கப்படும் மாய்ஸ்ச்சரைஸரை வாங்கிப் பயன்படுத்தலாம். இது முகத்தின் சருமம் பிசு பிசுப்பின்றி ஃபிரஷ்ஷாகத் தோன்ற உதவும். மேலும் மேக்கப்பாதி வழியில் கலைந்து போவதைத் தடுத்து நிறுத்தவும் செய்யும்.

பிரைமர் உபயோகிக்கும்போது அதை முகம் முழுவதும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எண்ணெய் அதிகமாக வரும் இடங்கள் அல்லது தோல் சீரற்றதாக இருக்கும் உங்கள் டி-மண்டலம் (T-zone) போன்ற இடங்களில் மட்டும் கவனம் செலுத்தி பிரைமரை உபயோகிங்கள். இப்படி செய்வதால் சருமம் அடுக்குகளாக அல்லது வெயிலின் சூட்டில் கனமாக இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்த்து, சருமப் பள பளப்பு குன்றாமல் பாதுகாக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தோற்றத்தை மாற்றும் மாயாஜாலம்: நவீன சிகை அலங்காரங்கள்!
summer-makeup-tips

4.ஹெவி மேக்கப் ஆரம்பத்தில் குறை இல்லாததாக தோன்றினாலும், போகப் போக வெயிலின் தாக்கத்தால் விரைவிலேயே கீறல் போன்ற வெடிப்புகளை உண்டு பண்ணி மேக்கப் சிதைந்து போகும் வாய்ப்பை உருவாக்கும். எனவே, உங்கள் அடிப்படை மேக்கப்பை மெலிதாகப் போட்டுக்கொள்ளுங்கள். தேவையான இடங்களில் மட்டும் மெதுவாக கவரேஜை அதிகரிக்கவும். இப்படி செய்வதால் அது இயற்கை முறையில் சீராக கலைந்துவிடும். பிளவுகள் தோன்ற வாய்ப்பிருக்காது.

5.உங்கள் மேக்கப் உருகிவிடும் தன்மை கொண்டதாக

இருப்பின், பயன்படுத்தும் டெக்ச்சர்களை பரிசீலிக்கவும்.

கிரீம்-டு-பவுடர் வகை ஃபார்முலாக்கள் எளிதில் கலக்கப்பட்டு சிறந்த முறையில் செட் ஆகும். இதனால், மாசுபட்ட பகுதிகளை அடிக்கடி சீராக்க வேண்டிய தேவையும், சமநிலையற்ற திட்டுக்களை முறைப்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது.

6.உங்களுக்கு, எந்த நேரமும் சருமத்தின் எல்லா இடங்களிலும் கிரீம்-டு-பவுடர் வகைகளை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றும். அது தவறு. எண்ணெய்ப் பசை மிக்க பகுதிகள் மற்றும் சுருக்கம் உள்ள இடங்களில் மட்டும் குறைந்த அளவு பவுடரை வைத்து மெதுவாக அழுத்திப் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் தோல் உலர்ந்த தோற்றம் பெறாமல் மேக்கப் நீண்ட நேரம் கலையாதிருக்கும்.

இதையும் படியுங்கள்:
பார்லர் போகாமலே உடல் பளபளக்க இந்த ஒரு பிரஷ் போதும்.. இணையத்தை கலக்கும் ட்ரை பிரஷிங் சீக்ரெட்!
summer-makeup-tips

7.உங்கள் சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகும் போது, மேலும் மேலும் பவுடரைத் தூவுதல் எதிர்மறை விளைவுகளையே உண்டு பண்ணும். அதற்குப் பதிலாக, முதலில் வியர்வை மற்றும் எண்ணெய் பிசு பிசுப்பை மெதுவாக துடைத்துவிட்டு, பிறகு தேவைப்பட்டால் லேசாக டச்-அப் செய்து கொள்ளலாம். இதனால் மேக்கப் கனமாகப் படிந்து சமநிலையற்ற தோற்றம் தருவதைத் தவிர்த்து ஃபிரஷ்ஷான தோற்றம் நிலை பெறச்செய்யலாம்.

8.செட்டிங் ஸ்பிரே ஒரு இறுதி அடைப்பான் (seal) போல செயலாற்றி, உங்கள் மேக்கப் வியர்வையிலும், ஈரப்பதத்திலும் கலைந்து விடாமலிருக்க உதவும். அதை ஒரு லேசான அடுக்குபோல் தெளித்து மேக்கப்பை முடித்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com