வெயிலால் முகம் கருகாமலிருக்க... வியர்வை நாற்றம் நீங்க... இதோ சில எளிய கோடைக்கால இயற்கை டிப்ஸ்!

கோடைக்கால வெயிலில் சருமம் கருகாமல், வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்க வைட்டமின் சி, ஈ நிறைந்த உணவு, இயற்கை பேஸ் பேக், சன்டேன் டோவன், குளிர்ந்த நீர்குளி போன்ற எளிய டிப்ஸ்கள்.
skin-and-hair-care-tips
skin-and-hair-care-tips
Updated on

* கோடையில் வெயிலில் வெளியில் சென்றால் சிலருக்கு சருமம் கருத்துவிடும் அல்லது திட்டு திட்டாக படலம் போல் வரும். இது போன்ற குறைபாடு உள்ளவர்கள் உணவில் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு நெல்லிக்காய் எலுமிச்சை கொய்யாப்பழம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நெல்லிக்காய் தயிர் பச்சடி அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

* எப்பொழுது வெளியே சென்றுவிட்டு வந்தாலும் கண்டிப்பாக சோப்பு போட்டு முகம் கை கால்களை கழுவவேண்டும். இரவில் படுக்க செல்லும்போதும்  காலையில் வெளியே செல்லும் பொழுதும் சூரிய வெப்பம் தாக்காமல் இருப்பதற்காக சன்டேன் டோவன் தடவிக் கொள்ளலாம்.

* கோடை உஷ்ணத்தால் தலைமுடி எண்ணெய் பசை காய்ந்து வறண்டு காணப்படும் நான்கு டீஸ்பூன் வால் மிளகு இரண்டு டீஸ்பூன் வெந்தயம் இவற்றுடன் சிறிதளவு கசகசாவை சேர்த்து பசும்பாலில் ஊறவைத்து அரைக்கவேண்டும் இதை தலையில் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் கூந்தல் வறட்சியின்றி இருக்கும்.

* கோடை காலத்தில் வைட்டமின் ஈசத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் பெண்கள் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். தூக்கத்துக்கும் சருமத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு தூக்கம் ஒரு நாள் கெட்டாலும் சருமம் வறண்டு சுருங்கிவிடும். அதுவும் கோடையில் ஏற்கனவே உடல் உஷ்ணத்தாலும் சுற்றுப்புற உஷ்ணத்தாலும் தூக்கம் வராமல் அவதிப்படுவோம்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கோடைகாலத்தில் சருமம் அதிகமாக வறண்டு போகாமல் இருக்க ரோஜா இதழ்கள் மூலமாக தயாரித்த தண்ணீருடன் கிளிசரின் கலந்து பேஸ் பேக் தயாரித்து அடிக்கடி முகம் கை கால்களில் தொடர்ந்து தடவி வந்தால் வறண்ட சருமம் பொலிவுடன் பளபளக்கும்.

இதையும் படியுங்கள்:
கத்திரி வெயிலை கூலாக சமாளிக்க சூப்பர் ட்ரிக்... இந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க ரொம்ப ஜில்லுனு இருக்கும்!
skin-and-hair-care-tips

* தண்ணீரில் வெட்டி வேரை நறுக்கி போட்டு நன்றாக ஊறியதும் குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் இல்லாமல் நீங்கிவிடும்.

* அரைத்து சந்தனத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து அதை வெதுவெதுப்பான நிலையில் உடலில் தேய்த்துக்கொண்டு வெதுவெதுப்பான நீரில் குடித்தால் மேனி பளபளப்பாக இருக்கும் கோடை வெப்பமும் குளு குளு என்று இருக்கும்.

* வாழைப்பழம் அரை அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் பால் அரை டீஸ்பூன் தேன் கலந்து . பேஸ் பேக் தயாரித்துக்கொண்டு முகத்தில் தடவி முப்பது நிமிடங்கள் உலர விட்டு பிறகு கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசிக்கும் கோடை காலத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக் இது.

* கோடையில் வியர்வை நாற்றம் வராமல் தடுக்க குளிக்கும் நீரில் சிறிது யூடிக்கோலன் அல்லது பன்னீர் கலந்து குளிக்கவேண்டும்.

* சந்தனம் விளாமிச்சை வேறு வெட்டிவேர் இலந்தை விதை தாளிக்காய் தோல் அகில் சிறுநாகப் பூ இவற்றின் தூளை பூசி குளிக்க உடலின் துர்நாற்றம் வேர்வையாக ஏற்படுவது நீங்கிவிடும்.

* வேப்பிலை புதினா சிறிது மருதாணி குப்பைமேனி இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்து தூளாக்கி வைத்துக்கொணடு இதன் பொடியில் சிறிது எடுத்து பாலில் குழைத்து தேய்த்து இருபது நிமிடம் ஊற வைத்து குளித்தால் முகத்தில் வேர்க்குரு வராது.வெயிலால் கருத்துப் போகாமல் முகம் இருக்கும்.

* வெயில் காலத்தில் வெளியில் அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூலிங் கிளாஸ் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள் அதனால் சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து கண்ணை பாதுகாக்கலாம்.

* வெயில் காலத்தில் சூரிய கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது படுவதால் சொறி அரிப்பு போன்றவை ஏற்படும் அதனால் வெயில் காலத்தில் தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை கட்டாயம் குளிக்கவேண்டும்.

* வெயில் காலத்தில் வெப்பத்தை தணிக்கும் குளிர்பானங்கள் இளநீர் தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவது நல்லது இதனால் உடல் உஷ்ணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் தலைமுடி உதிர்வை தடுக்கும் சீக்ரெட்... இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
skin-and-hair-care-tips

* அரைத்த வெள்ளரிக்காய் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை  ஒரு டீ ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து உடம்பு முழுவதும் தேய்த்துக் குளித்தால் கோடையின் வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்துவிடும் சருமத்தை ஈரப்பதமாகவும் இருக்க செய்யும்.

* வியர்குருவால் தொல்லைப்படுபவர்கள் உடல் உஷ்ணத்தை தணிக்கும் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் கிர்ணி பழம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com