கத்திரி வெயிலை கூலாக சமாளிக்க சூப்பர் ட்ரிக்... இந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க ரொம்ப ஜில்லுனு இருக்கும்!

Summer dress Tips
Summer dress Tips
Published on

கோடை வெயில் கொளுத்தினாலும், அதற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே ஏசியில் முடங்கிக் கிடப்பது எல்லோருக்கும் சாத்தியமான ஒரு விஷயம் கிடையாது. வேலைக்காகவோ அல்லது வேறு சில முக்கியத் தேவைகளுக்காகவோ நாம் வெளியே சென்றுதான் ஆக வேண்டும். 

அப்படி கொளுத்தும் வெயிலில் வெளியே செல்லும்போது, நமது உடலைக் குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நாம் அணியும் உடைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சம்மரில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பருத்தி ஆடைகளே சிறந்தது!

வெயில் காலத்தில் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை, உங்களின் பீரோவில் இருக்கும் பாலியஸ்டர் மற்றும் நைலான் துணிகளை எல்லாம் ஓரம்கட்டி வைப்பதுதான். இந்த செயற்கை இழைகள் காற்றை உள்ளே விடாமல் தடுத்து நமது வியர்வையை அப்படியே உடலிலேயே தங்க வைத்துவிடும். இதனால் கடுமையான அரிப்பு மற்றும் சருமப் பிரச்னைகள் வரும்.

இதற்குப் பதிலாக நூறு சதவீதம் சுத்தமான காட்டன் எனப்படும் பருத்தி ஆடைகளை மட்டுமே தேர்வு செய்து அணியுங்கள். இது வியர்வையை எளிதாக உறிஞ்சி உங்கள் உடலை எப்போதுமே ரொம்ப பிரெஷ்ஷாக வைத்திருக்கும். பருத்தியைத் தவிர லினன் துணிகளும் கோடைக்காலத்திற்கு ஒரு அருமையான தேர்வாக அமையும். லினன் ஆடைகள் பார்ப்பதற்கு ஒரு ராயல் லுக்கைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவும் ரொம்பவே உதவுகின்றன.

வெளிர் நிறங்களுக்கு மாறுங்கள்!

நீங்கள் அணியும் துணியின் நிறத்திற்கும் வெயிலுக்கும் ஒரு மிகப்பெரிய அறிவியல் தொடர்பு இருக்கிறது. கருப்பு, அடர் நீலம் மற்றும் சிவப்பு போன்ற அடர்த்தியான நிறங்கள் சூரிய வெப்பத்தை ஒரு மேக்னட் போல தங்களை நோக்கி ஈர்க்கும் தன்மை கொண்டவை. இவற்றை அணிந்தால் நீங்கள் ஒரு ஓவனுக்குள் இருப்பது போல உணர்வீர்கள். 

ஆனால் வெள்ளை, வெளிர் நீலம், சந்தன நிறம் மற்றும் பேஸ்டல் கலர்கள் எனப்படும் மென்மையான நிறங்கள் வெப்பத்தை அப்படியே திருப்பி அனுப்பிவிடும். இந்த வெளிர் நிற ஆடைகள் சுட்டெரிக்கும் வெயிலில் செல்வோருக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும்.

இதையும் படியுங்கள்:
கோடையில் டீ, காபிக்கு 'டாட்டா' சொல்லுங்க! சுகாதாரத் துறை எச்சரிக்கை.!
Summer dress Tips

இறுக்கமான உடைகளைத் தவிருங்கள்!

கோடையில் ஃபிட்டான உடைகளை அணிவது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும், அது உடலுக்கு மிகப் பெரிய எதிரியாகும். உடலோடு ஒட்டியிருக்கும் ஜீன்ஸ் மற்றும் டைட்டான டி-ஷர்ட்டுகள் காற்றில்லாத ஒரு புழுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உடலுக்கு நன்கு காற்றோட்டம் கிடைக்கும் வகையில் சற்று தளர்வான குர்தாக்கள், லூசான காட்டன் பேன்ட்கள் மற்றும் மேக்ஸி டிரஸ் மாடல்களை அணிவது ரொம்பவே சௌகரியமாக இருக்கும். காற்றில் துணிகள் ஆடும்போதுதான் உடலுக்குத் தேவையான குளிர்ச்சி இயற்கையாகவே கிடைக்கும்.

பாதுகாக்கும் ஆக்சஸரீஸ்!

ஆடைகளைத் தவிர வெயிலில் இருந்து தப்பிக்க சில முக்கியமான பொருட்களும் உங்களுக்குத் கட்டாயம் தேவைப்படும். முகத்தை வெயிலில் இருந்து மறைக்க ஒரு அகலமான காட்டன் ஸ்கார்ஃப் அல்லது தொப்பியைப் பயன்படுத்துங்கள். கண்களைப் பாதுகாக்க ஒரு தரமான கூலிங் கிளாஸ் அணிவது மிக அவசியம். அதேபோல வெயிலில் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கைகளை மறைக்கும்படியான முழுக்கை சட்டைகளை அணிவது, கைகளில் ஏற்படும் அதீத கருமையைத் தடுக்கும் ஒரு சிறந்த தந்திரமாகும்.

இதையும் படியுங்கள்:
கோடையில் சரும அரிப்புகளைத் தடுக்க 10 எளிய வழிகள்!
Summer dress Tips

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இந்த கோடையை எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் மிகக் கூலாகவும் ஆரோக்கியமாகவும் கடந்து செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com