வெயிலினால் ஏற்படும் உதடு வெடிப்புகள் - வருமுன் காக்க சில வழிமுறைகள்

வெயிலினால் ஏற்படும் உதடு வெடிப்புக்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
sunburnt cracked lips
sunburnt cracked lips
Published on

வெயிலினால் உதடுகள் வறண்டு வெடிப்பதற்கான முக்கிய காரணம் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் (UV rays) உதட்டின் ஈரப்பதத்தை நீக்கி வறட்சியை ஏற்படுத்துவதுதான். அதனால் உதடுகள் வெடித்து ரத்தம் கசிவதையும், வலி ஏற்படுவதையும் பார்க்கலாம்.

உதடுகள் வெடிப்பதற்கான காரணங்கள்:

a) வெயிலில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது உதடுகளின் ஈரப்பதத்தை இழக்கச் செய்து வறண்டு போக காரணமாகிறது. இதனால் வெடிப்பும் ஏற்படும்.

b) போதுமான அளவு தண்ணீர் அருந்தா விட்டால் உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல் போய் வெடிப்புகள் உண்டாகும்.

c) குளிர் மற்றும் வறண்ட கால நிலையில் உதடுகள் வறண்டு போவதும், வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

d) வைட்டமின் ஏ, பி குறைபாடுகள் காரணமாகவும், தோல் தொடர்பான பிற பிரச்சனைகள் காரணமாகவும் ஏற்படலாம்.

e) சில அழகு சாதனங்கள், லிப் பாம், லிப்ஸ்டிக் போன்றவைகளால் உதடுகளில் அலர்ஜி ஏற்பட்டு வெடிப்பு உண்டாகலாம்.

f) வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்று காரணமாகவும் உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
வறண்டு போகும் உதடுகள்... அச்சச்சோ! என்ன செய்யலாம்?
sunburnt cracked lips

அறிகுறிகள்:

a) உதடுகள் வறண்டு, செதில்களாக காணப்படுவது

b) உதடுகளில் வெடிப்பு, ரத்தம் வருதல், வலி, எரிச்சல் போன்ற உணர்வை ஏற்படுத்துதல்

c) உதடுகளில் அரிப்பு மற்றும் வீக்கம் உண்டாகுதல்

தடுப்பு முறைகள் மற்றும் தீர்வுகள்:

a) அதிகமான வெயிலில் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுதல் நல்லது.

b) வெளியே செல்லும்பொழுது SPF கொண்ட உதட்டு தைலத்தை (Lip balm) பயன்படுத்தலாம்.

c) போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும்.

d) வறண்ட கால நிலையில் ஈரப்பதமூட்டும் லிப் பாம்களை பயன்படுத்தலாம்.

e) வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் கிர்ணி பழம் போன்ற நீரேற்றமான கனிகளை எடுத்துக் கொள்வது நல்லது.

f) கடுமையான ரசாயனங்கள், செயற்கை நறுமணங்கள் அல்லது ஆல்கஹால் கொண்ட லிப் பாம்களை தவிர்க்கலாம். அதற்கு பதில் தேங்காய் எண்ணெய், தேன் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை லிப் பாம்களை பயன்படுத்தலாம்.

g) தேனுடன் சர்க்கரை அல்லது ஆலிவ் எண்ணெயை நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து உதட்டுப் பகுதியில் வட்ட இயக்கத்தில் தடவி பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ உதடுகளில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

h) விட்டமின் பி, சி மற்றும் ஈ போன்ற விட்டமின்களின் பற்றாக்குறை காரணமாகக் கூட வறண்ட உதடுகள் ஏற்படலாம். இதற்கு கீரைகள், நட்ஸ் வகைகள், சிட்ரஸ் பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

i) வெறும் லிப் பாமும் பெட்ரோலியம் ஜெல்லியும் தற்காலிக தீர்வு தருமே தவிர முழுமையான நிவாரணம் தராது. எனவே உதட்டில் இரத்தத்துடன் கூடிய வலி, வெடிப்பு ஏற்பட்டால், உடன் சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
உதடுகளில் பிரச்சினையா? அதை சரிசெய்ய இதோ சில எளிய டிப்ஸ்!
sunburnt cracked lips

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com