வறண்டு போகும் உதடுகள்... அச்சச்சோ! என்ன செய்யலாம்?

Dry lips
Dry lips
Published on

மழைக்காலங்களில் மக்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைவதோடு உதகளும் வறண்டு விடும். இவ்வாறு உதடுகள் வறண்டு போவதால், உதட்டில் உள்ள தோல் உரிந்து எரிச்சல் உணர்வை அளிக்கும். இதனால் அடிக்கடி உதடுகளை நாவால் ஈரம் செய்வர். ஆனால் அவ்வாறு நாவால் உதடுகளை ஈரம் செய்தால், உதடுகளில் வெடிப்புகள் தான் ஏற்படும். எனவே மழைக்காலங்களில் உதடுகளின் மேல் கூடுதல் அக்கறை வைத்தால், இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும். அது எப்படி என்று  இந்த பதிவில் காணலாம்.

மழைக்காலங்களில் உதடுகளை எப்படி பார்த்துக் கொள்ளலாம்?

தூங்கும் முன் லிப் பாம் பயன்படுத்தவும்

மழைக்காலம் தொடங்கினாலே தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உதடுகளில் லிப்பாம் தடவவும். உதடுகளை நீரேற்றமாக வைத்திருக்கும் லிப்பாமை பயன்படுத்தவும். இதனால் உதடுகளின் ஏற்படும் வறட்சி கட்டாயம் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலம் தொடங்கியது மக்களே! அப்ப இந்த கஷாயம் கண்டிப்பா தேவை!
Dry lips

மசாஜ் செய்யவும்

பாடி மசாஜ் உங்களை ரிலாக்ஸாக உணர வைப்பது போல், சருமத்தையும் பளபளப்பாக மாற்றும், இறந்த செல்களையும் அகற்றும். அதேபோல், மழைக்காலத்தில் உதடுகளையும் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால், உதடுகளை கடுமையாக மசாஜ் செய்தால் காயத்தை ஏற்படுத்தும். எனவே உதடுகளை கவனமாக மசாஜ் செய்ய வேண்டும்.

Lips
Lips

தண்ணீர் குடியுங்கள்

உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உதடுகளை வறண்டு போகாமல் பாதுகாக்கும். தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்.

உணவிலும் கவனம் தேவை

உதடுகளின் வறட்சியை நீக்க, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது அவசியம். போதுமான அளவு தண்ணீர் உள்ள காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம், உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதனால் உதடு வெடிப்பு பிரச்சனை குறையும்.

இது தவிர தேங்காய் எண்ணெய், பாதம் எண்ணெய், கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய், வெண்ணை, ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல் போன்றவற்றையும் உதடுகளில் பயன்படுத்தலாம்.

இவ்வாறு மழைக்காலங்களில் உங்கள் உதடுகளை நீங்கள் பார்த்துக் கொண்டால் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், வறட்சி போன்ற பிரச்சனைகளை தடுத்து அழகான உதடுகளை பெறமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com