சக்கைப்போடு போடும் சன்ஸ்கிரீன் விற்பனை! ஏன் தெரியுமா?

சன்ஸ்கிரீன் ஜெல்...
சன்ஸ்கிரீன் ஜெல்...pixabay.com

ம் அழகை பராமரிப்பதற்காக நாம் எவ்வளவுதான் முயற்சிகள்  எடுத்தாலும் ஒரு சிறு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால், மொத்த முயற்சியுமே பாழகிவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம் உண்மைதான். நம் சரும அழகை பாதுகாக்க முக்கியமாக நாம் செய்ய வேண்டியது, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் போடுவதாகும்.

சன்ஸ்கிரீன் என்பது சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிரிலிருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் பயன்படுத்தும் க்ரீமாகும். இது நம் சருமத்தை வெயிலிலிருந்தும் சரும புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கும்.

சன்ஸ்கிரீன்கள் ஜெல், லோஷன், கிரீம் போன்றவற்றில் கிடைக்கிறது. சன் ஸ்கிரீம் போடாததால் நம் சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, பிக்மென்டேஷன் போன்றவை வரக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் நம் சருமத்திற்கு மிகவும் முக்கியமாகும்.

சன்ஸ்கிரீன் இரண்டு வகைப்படுகிறது,

ஒன்று பிசிக்கல் பிளாக்கர்ஸ், இரண்டாவது கெமிக்கல் அப்சார்ப்பர்ஸ்.

பிசிக்கல் பிளாக்கர்ஸ் என்றால், நீங்கள் இந்த வகை சன்ஸ்கிரீனை தடவும்போது அதில் பயன்படுத்தியிருக்கும் டைட்டானியம் டை ஆக்ஸைட் அல்லது ஸிங் ஆக்ஸைட் போன்றவை புறஊதாக்கதிர் உங்கள் சருமத்தில் படாமல் ஒரு கவசம் போல பயன்படும்.

இதுவே  கெமிக்கல் அப்சாப்பர்ஸ் என்றால், புறஊதாக்கதிர்கள் நம் சருமத்தில் ஊடுருவுவதற்கு முன் இவை அதை உறிஞ்சிக்கொள்ளும்.

புறஊதாக்கதிர் நம் சருமத்தில் படுவதால், சருமம் வயதாவதற்கும், சரும புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அதை தடுக்க வேண்டுமானால் சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சன் ப்ரொட்டக்ஷன் ப்பேக்டர்...
சன் ப்ரொட்டக்ஷன் ப்பேக்டர்...pixabay.com

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது.

சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம், SPF ( சன் ப்ரோட்டக்ஷன் பேக்டர்).

சன் ப்ரொட்டக்ஷன் ப்பேக்டர் என்றால், இது எவ்வளவு நேரம் நம் சருமத்தை வெயிலில் இருந்து காக்கும் என்பதாகும். SPF 50 யை வாங்குவதே சிறந்ததாகும். ஏனெனில் இது 98 சதவீத சூரிய ஒளியை தடுக்கிறது. எனினும் SPF 30 பயன்படுத்தலாம் என்று சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது 96.7 சதவீதம் சூரிய ஒளியை தடுக்கும்.

பிஏ என்பது சூரிய ஒளியை தடுக்கும் திறன் கொண்டதை குறிக்கிறது. பிளஸ் அதிகமாக ஆக அதன் திறனும் அதிகமாகும். பிஏ++++ அதிகமாக 95 சதவீதம் வரை புற ஊதாக்கதிரை தடுக்கும்.

சன்ஸ்கீரினை முகத்திற்கு மட்டுமில்லாமல் வெயில் படக்கூடிய இடங்களான கை, கால்கள் என்று எல்லா இடங்களிலும் தடவ வேண்டும்.

சன்ஸ்கிரீனை பெரும்பாலும் வாட்டர் ரெசிஸ்டன்டாக பார்த்து வாங்குவது நல்லது. வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லதாகும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீனை போட மறந்துவிடக்கூடாது.

இதையும் படியுங்கள்:
பேக்கரி டேஸ்ட்டில் வாழைப்பழ கேக் செய்யலாம் வாங்க!
சன்ஸ்கிரீன் ஜெல்...

சன்ஸ்கிரீனின் பயன்கள், புறஊதா கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது, சருமத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் வராமல் தடுக்கிறது, வெயிலை தடுக்கும், சருமத்தை வயதாகாமல் தடுக்கும், மெலஸ்மாவை தடுக்கும், சூரிய புள்ளிகளை தடுக்கும், சருமைத்தை மேம்படுத்தும், ஈரப்பதமாகவும், சருமத்தில் ஹைப்பர் பொக்மென்டேஷன் போக்கவும் உதவுகிறது.

சன்ஸ்கிரீனை இரண்டு விரல் நீளத்திற்கு எடுத்துக்கொண்டு முகம், காது, கழுத்து என்று தடவ வேண்டுமென கூறுகிறார்கள். இதுவே இரண்டு விரல் விதிமுறையாம். இது இளைய தலைமுறையினரிடம் பிரபலமடைந்தாலும், இதுபோன்றவையெல்லாம் உண்மை கிடையாது என்று கூறுகின்றனர். சன்ஸ்கிரீனை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருமே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தகக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com