
சிலருக்கு முகத்தில் ஏராளமான பருக்கள் ஏற்பட்டு சிரங்கு போல் முகத்தை அசிங்கப்படுத்தி விடும். பருக்களினால் முகத்தில் ஆங்காங்கே தழும்புகளும் ஏற்படும் முகத்தின் பருக்களை நீக்க சில வழிகளை கடைப்பிடிக்கலாம்.
1. வெள்ளைப் பூண்டு பாலில் அரைத்து முகப்பருவின் மீது தடவ பரு உடைந்து சீக்கிரம் நீக்கிவிடும்.
2. சின்ன வெங்காயத்தை தட்டி சாற்றை எடுத்து முகப்பருவின் மீது பூசினாலும் பரு மாயமாகிவிடும்.
3. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தேய்த்து ஊறிய பின் கழுவி வந்தால் முகப்பரு நீங்கிவிடும்.
4. ஒரு தேக்கரண்டி தயிரில் மஞ்சள் பொடியை சேர்த்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவினால் பருக்கள் மறைந்து விடும் .
5. முகப்பருக்கள் முற்றிய நிலையில் இருந்தால் உடனே வெதுவெதுப்பான அரிசி கஞ்சியை இரவில் தடவிக் கொண்டு காலையில் முகத்தை கழுவினால் பருக்கள் போய்விடும்.
6. முகப்பருவை போக்க புதினா இலையை நன்கு அரைத்து தயிரில் கலந்து அல்லது தனியாகவோ முகப்பரு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் நீங்கும்.
7. உரித்த நுங்கின் தோல்களை கசக்கி அந்த கையினால் முகம் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சை பயறை அரைத்து முகத்தை கழுவி வந்தால் பருக்கள் வடுக்கள் மறையும்.
8. முகப்பருக்கள் அதிகம் இருந்தால் கருஞ்சீரகத்தை அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு அரைத்து அதை பருக்களின் மீது தினசரி போட்டு வந்தால் முகப்பரு அமுங்கிவிடும்.
9. பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும்.
10. முகத்தில் பரு அதிகமாக இருப்பவர்கள் சந்தனக்கட்டையை இழைத்து பன்னீரில் கலந்து இரவில் முகத்தில் பூசி வர பருக்கள் மறையும் முகம் பளபளப்பாக மாறும்.
11. ஒரே ஒரு பாதாம் பருப்பு ஒரு தேக்கரண்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும் பாதாம் பருப்பை விழுதாக்கி பாலில் கலந்து கால் தேக்கரண்டி சந்தனத் தூளும் கலந்து முகத்தில் குறிப்பாக பரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும் மசாஜ் செய்து கழுவி விட்டால் போதும் முகம் அழகாகிவிடும்.
12. முகப்பருக்களை விரல்களினால் கிள்ளவோ அல்லது அழுத்தவும் கூடாது. இதனால் வீக்கம் பரவி நிரந்தரமான தழும்பாக மாறிவிடும். பரு அதிகம் உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் எண்ணெய் அடிப்படையாக வைத்து தயாரிக்காமல் தண்ணீரை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். ஆல்கஹால் இல்லாத மேக்கப் நீரை பயன்படுத்தலாம்.
13. அதிக அடர் இல்லாத சாதாரண சோப்பு தான் பயன்படுத்த வேண்டும். ஆன்டி செப்டிக் கிளன்சர்கள் பருக்களுக்கு நல்லதல்ல.
14. எண்ணெய் பசை உள்ள தலைமுடி பருவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் தலைமுடிக்கு அதிகப்படியான எண்ணையை அகற்றும் திறன் கொண்ட ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.
15. சருமத்துக்கு கடின தன்மையை ஏற்படுத்தும் பருவை தேய்ப்பதோ சுரண்டுவதோ கூடாது. சாக்லேட் இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிட்டால், முகப்பரு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
16. முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும் தோல் மிருதுவாக இருந்தால் முகப்பரு வராது. தினமும் கீரைகள், பழச்சாறுகள் சாப்பிடுவதன் மூலம் முகப்பரு வராமல் தடுக்க முடியும்.