மனித சரீர இலட்சணங்கள் கூறும் அழகியல் சாரங்கள்!

The aesthetic essences of human body features!
Azhagu kurippugal
Published on

ருவரின் தேகத்தைப் பார்த்தவுடன் அவர் இப்படிப் பட்டவராக இருக்கலாம். இன்ன தொழில் செய்பவராக இருப்பார் என்று கூறி விடுபவர்கள் உண்டு. இவர்கள் எதையும் நுணுகி ஆராய்பவர்களாக இருப்பதால்தான் இப்படி கூற முடிகிறது. அப்படி சரீரத்தை பற்றிய இலட்சண குறிப்புகளை இதில் காண்போம். 

சிலர் மேனியைப் பார்த்தால் பொன் போன்று தகதகத்து இருக்கும். அதுபோன்ற சரீரம் உடையவர்கள் தாய் தந்தையரையும், பந்துக்களையும், பெரியோர்களையும், பக்தியுடன் ஆராதித்து மகிழ்ந்து அவர்கள் ஆசியினால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம். 

சரீரம் வெளுத்து பளபளப்பாகவோ, அழகிய பசுமையாகவோ இருந்தால் அவர்கள் திட சித்தமுடையவர்கள். சாந்தமாக இருப்பார்கள். சகல சுகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உடையவர்கள். பிறருக்கு உதவி செய்யும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது சாஸ்திரம்.

பிரகாசமான தேகம் உடையவர்கள் சுகபோகிகளாகவும், மகத்தான ஐஸ்வர்யங்களை உடையவர்களாகவும் இருப்பார்களாம். 

மனித சரீரத்தின் தேககாந்தி பளபளப்பாக இருந்தால் சகல சம்பத்துக்களும் பெருகும். நற்புகழ் உண்டாகும். இவர்கள் சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள், சரீரம் மென்மையாக இருந்தால் இவர்கள் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். புத்தியில் வலிமையும், மனதில் உறுதியும் உடையவர்களாக எதையும் தெளிவாக அறிந்து செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். அமைச்சர்களுக்குத் தேவையான அறிவாற்றல்களை அள்ளி வழங்குப வர்களும், அப்படிப்பட்ட ஆற்றல் உடையவர்களும் இவர்களாகவே இருப்பார்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம். 

அக்னி வர்ணம் உடையவர்கள் வாய் பேச்சில் மகா நிபுணர்களாக திகழ்வார்கள். எதையும் எளிதில் நிறைவேற்றிக் கொள்பவர்கள் இவர்களே. 

இதையும் படியுங்கள்:
பத்ம ரேகை அமையப்பெற்ற உள்ளங்கால் சொல்லும் இலட்சண குறிப்புகள்!
The aesthetic essences of human body features!

தாமரை மலரைப் போன்ற நிறம் உடையவர்களாக இருந்தால் அவர்கள் தைரியமும் ,துணிச்சலும் கொண்டவர்களாகவும் ,பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆமாம், அப்படி பிடிவாதமாக இருந்தால்தானே எதையும் சாதிக்க முடியும். அதனால் சாதனையாளர்கள் என்றால் அது இவர்களே என்று எண்ணலாம்.

பவளம் போன்ற மேனி உடையவர்கள் வலிமை உடையவர்களாகவும், சமய சந்தர்ப்பங்களை உணர்ந்து சாமர்த்தியமாக செயலாற்று பவராகவும் இருப்பார்கள். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுபவர்கள் இவர்களே! 

கண்ணாடியைப் போன்ற துல்லியமான தேகம் உடையவர்கள் உலகப் புகழ் பெறத்தக்க அறிவாற்றலும், நற்குணமும் கொண்டவர்களாக திகழ்வார்கள் என்று சரீர லட்சணங்கள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com