உங்கள் சருமத்திற்கு பீட்ருட் தரும் ‘அழகு’ நன்மைகள்!

Beetroot face pack
Beetroot face pack

பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் சருமம் தொங்கிப் போவதை தடுத்து இளமையான தோற்றத்தை தரக்கூடியது. பீட்ரூட்டில் உள்ள விட்டமின் சி யானது சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கக் கூடியது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புள்ளது. விட்டமின் ஏ, சி மற்றும் விட்டமின் கே உள்ளது.

பீட்ரூட்டின் தமிழ் பெயர் செங்கிழங்கு. பெண்கள் எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். பீட்ரூட் இயற்கையாகவே முகத்தை பளபளக்க வைக்கும். பக்க விளைவே இல்லாததும், சரும பொலிவுக்கு ஏற்றதுமான பீட்ரூட் இயற்கை கொடுத்த நன்கொடையில் சிறந்த ஒன்று. இதைக் கொண்டு நிறைய வகையான ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.

பீட்ரூட்டில் பல வகையான விட்டமின்கள் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

பீட்ரூட்டும் தேனும்
பீட்ரூட்டும் தேனும்

முகப்பருக்களை சுற்றி ஏற்படும் புண்களையும், நோய் தொற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கும் தன்மை கொண்டது பீட்ரூட் சாறு.

பீட்ரூட்டும் தேனும்: நான்கு ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் பளபளப்பாகும்.

பீட்ரூட்டும் தக்காளி சாறும்: முகப்பரு, பிளாக் ஹெட்ஸ் ஆகியவற்றிற்கு சிறிதளவு பீட்ரூட் சாறுடன் தக்காளி சாறு கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டு முகம் கழுவ முகப்பரு, பிளாக் ஹெட்ஸ் ஆகியவை நீங்கும்.

பீட்ரூட்டும் தயிரும்: பீட்ரூட் சாறுடன் சிறிது தயிர் கலந்து அதனை முகம் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வறண்ட சருமம் மென்மையாக மாறிவிடும். இதில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால் முகம் பளபளப்பாகும்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்கள் ஆகியவை போக வாரத்திற்கு மூன்று முறை பீட்ரூட் சாறுடன் சிறிது தேன், சிறிது பால் கலந்து குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர சருமம் தொங்கிப்போவதை தடுத்து இளமையான தோற்றம் பெற்று தரும்.

பீட்ரூட்டும் கற்றாழை ஜெல்லும்
பீட்ரூட்டும் கற்றாழை ஜெல்லும்

பீட்ரூட்டும் கற்றாழை ஜெல்லும்:  பீட்ரூட் சாறு, 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவி விட பளபளப்பான தோற்றம் கிடைக்கும்.

பீட்ரூட்டும் எலுமிச்சம் பழச்சாறும்: பீட்ரூட் சாறுடன் ஒரு மூடி எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகம், முன்கழுத்து, பின் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும். பளிச்சென்ற தோற்றம் கிடைக்கப்பெறும்.

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய பீட்ரூட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் சருமத்துளைகளை சரி செய்யலாம். தோலுக்கு இளம் சிவப்பு நிறத்தையும் அளிக்கக் கூடியது இந்த பீட்ரூட் ஃபேஸ் பேக்.

இதையும் படியுங்கள்:
மேககூட்டங்களின் நடுவே மறைந்திருக்கும் மாணிக்கம்! மேகமலைக்கு ஒரு பயணம்!
Beetroot face pack

பீட்ரூட் சருமத்துக்கு ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. நம் சருமத்தில் உள்ள துளைகளை திறக்க உதவுகிறது. 

சிலருக்கு உதடுகள் வெடித்து அல்லது காய்ந்து போகும். இதற்கு பீட்ரூட் சாறை தடவி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். உதட்டின் கருமை நீங்கி உதடு சிகப்பாவத்துடன் வறண்டு போகாமலும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

ரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன் ஒரு பங்கு நீர் கலந்து உடம்பில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து அப்பகுதியை கழுவிவிட அரிப்பு, எரிச்சல் ஆகிவை குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com