Drumstick for Skin Care
The Benefits of Drumstick for Skin Care

சருமத்தை பாதுகாக்கும் முருங்கைக்காய்! 

சருமத்தை முறையாக பராமரிக்க சந்தையில் கிடைக்கும் பல்வேறு சரும பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்தி சலித்துவிட்டதா? சரி, கவலையை விடுங்க. முருங்கைக்காய் இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு?. முருங்கைக்காய் என்பது அந்த சமாச்சாரத்திற்கு மட்டுமின்றி, சரும அழகைக் கூட்டவும் பல வகைகளில் பயன்படுத்தலாம். முருங்கை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இது பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவில் முருங்கைக்காயை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

முருங்கையில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ராடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த ஆக்சிஜனேற்றிகள் சருமத்தை ஆக்சிஜனேற்ற அடுத்ததிலிருந்து பாதுகாத்து, சுருக்கங்கள், கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற அறிகுறிகளைத் தடுக்கின்றன. எனவே முருங்கையை சருமத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தினால் இளமை மற்றும் பொலிவான சருமத்தை அடையலாம். 

மேலும், முருங்கையில் உள்ள விட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. முருங்கை எண்ணெய் அல்லது சாறுகளை வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்ய மேற்பூச்சாக பயன்படுத்தலாம். 

முருங்கையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது. முகத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், எரிச்சலை சரி செய்யவும், புதிதாக முகப்பருக்கள் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கைக்காய் அடிப்படையிலான தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் தெளிவான மற்றும் மென்மையான சரும நிறத்தை அடையலாம். 

முருங்கைக்காயின் ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் கிருமி நாசினிப் பண்புகள், காயத்தை குணப்படுத்துவதற்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. வெட்டுக் காயங்கள் தீக்காயங்கள் மற்றும் சிறிய தோல் காயங்கள் விரைவில் சரியாகும் செயல்முறையை அதிகரிக்க முருங்கைக்காய் உதவும். முருங்கை பேஸ்ட் அல்லது எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதால் பழையதோல் மீண்டு வருவதற்கு உதவும். 

முருங்கைக்காயில் உள்ள நச்சு நீக்கும் தன்மை சருமத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கி புத்துணர்ச்சியாக உணர வைக்கும். இது முகத்துவாரங்களில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் அதிகபடியான எண்ணெயை நீக்குகிறது. மேலும் முகத்தில் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை உருவாவதைத் தடுக்கிறது.‌ முருங்கைக்காய் அடிப்படையிலான கிளன்சர்கள் அல்லது ஃபேஸ் மாஸ்கை வழக்கமாகப் பயன்படுத்தினால் பிரகாசமான முகத்தோற்றத்தை அடையலாம். 

இதையும் படியுங்கள்:
Vitamin B12 குறைவினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
Drumstick for Skin Care

இப்படி சருமப் பராமரிப்புக்கு  முருங்கைக்காய் என்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இதன் அற்புதப் பலன்களைப் பெற, முருங்கைக் கீரை அல்லது முருங்கைக்காயை உங்களது உணவில் ஒரு பகுதியாக உட்கொள்ளுங்கள். மேலும் முருங்கைப் பொருட்களை சருமத்தில் பயன்படுத்தி நேரடி சரும நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும். 

logo
Kalki Online
kalkionline.com