முகப்பரு ஏற்படுவதற்கான காரணமும், அதனை தடுக்கும் வழிமுறைகளும்!

The cause of acne...
Image credit - pixabay
Published on

முகத்தில் முகப்பருக்கள் அதிகம் தோன்றி அதன் வடுக்கள் மறையாமல் இருந்தால் அது சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துவதுண்டு. இதனால் தன்னம்பிக்கை குறைந்து போனவர்களையும் காணமுடியும். ஆதலால் முகப்பருக்கள் வராமல் பாதுகாப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம். 

நம்முடைய உடலின் மிகப்பெரிய உறுப்பு நமது சருமம். அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன சின்ன ஓட்டைகள் உள்ளன. நாம் எப்படி மூக்கால் சுவாசிக்கிறோமோ அதே போல்தான் சருமம். அந்த சின்ன துவாரங்கள் மூலம் சுவாசிக்கிறது. அதில் அடைப்பு ஏற்படும்போது அது பருவாக மாறுகிறது.

நம்முடைய சருமத்தில் சீபம் என்ற எண்ணைய் திரவம் வெளியேறும். இந்த எண்ணெய் பசை அதிகமாக சுரந்து அதனுடன் பாக்டீரியா கிருமி செயல்படும்போது பரு உருவாகிறது. பருக்கள் பொதுவாகவே மாதவிடாய் தருணத்தில் தோன்றும். சிலருக்கு ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும் போதும் தோன்றும். இவை ஒன்று இரண்டு நாட்களில் மறைந்துவிடும். ஆனால் பருக்கள் மறையாமல் சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஆக்னி என்பர். 

நமது சருமத்தில் அதிகமாக எண்ணெய் பசை வெளியேறுவதாலும் அதை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாத காரணங்களாலும் ஆக்னி ஏற்படுகிறது. 

ஆக்னி வராமல் இருக்க  பருக்களைக் கிள்ளாமலும் ஊசியால் குத்தி அதை சுத்தப்படுத்துகிறேன் என்று செய்யாமலும் இருக்கவேண்டும்.

நம் உடலில் உள்ள ரத்தம் சரியான முறையில் சுத்திகரிப்பு செயலை செய்யாததாலும் பருக்கள் தோன்றும். தினமும் அரை டீஸ்பூன் வேம்பு பவுடருடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து சூடான தண்ணீரில் தினமும் காலை வெரும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு பருக்களும் மறையும். 

மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். திரிபலா பவுடர் கடையில் கிடைக்கிறது. அதை அரை ஸ்பூன் சூடான தண்ணீரில் கலந்து தினமும் படுக்கும் முன் குடிக்கலாம். மலச்சிக்கல் ஏற்படாது. 

இதையும் படியுங்கள்:
வாழை இலை ஃபேஸ் பேக்கில் இத்தனை நன்மைகளா?
The cause of acne...

காலாமைன் லோஷனுடன் ஒரு சொட்டு கிராம்பு எண்ணெய் கலந்து முகத்தில் தடவிக் கொண்டு ,இரவு படுக்கும் முன் முகத்தை இயற்கையான சோப்பினால் கழுவிக் கொள்ளலாம். 

சந்தனத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து பருக்கள் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவினால் போதும். நாளடைவில் பருக்கள் குறைந்துவிடும். 

சிவப்பு சந்தன பவுடர், வேம்பு பவுடர், துளசி பவுடர், பப்பாளி பவுடர், முல்தானி மெட்டி பவுடர் அனைத்திலும் தலா அரை டீஸ்பூன் எடுத்து சிறிதளவு பன்னீர் கலந்து பேஸ்ட் போல குழைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவினால் பருக்கள் காணாமல் போகும். 

எண்ணெயில் பொரித்த உணவுகள், முந்திரி, பாதாம், கடலை, எல்லா வகையான குளிர்பானங்கள், மசாலா நிறைந்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், ப்ரைட் ரைஸ் போன்றவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் பருக்கள் வருவது பெரும் அளவில் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com