
முகத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதால் அழற்சியைக் குறைத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது முகவீக்கம் மற்றும் சிவத்தலை குறைப்பதோடு இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும். மேலும் முகத்துளைகளை திறந்து முகத்தை இறுக்கமாக்கும். ஆனால் ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்போது மூன்று விஷயங்களை கவனிக்கவேண்டும்
ஒரு துணியில் ஐஸை சுற்றி ஒத்தடம் தரூவது நல்லது.
ஐஸ்ரோலரால் மசாஜ் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில் ஐஸ் நீர் நிரப்பி முகத்தில் தெளிக்கலாம்.
ஐஸ் ஒத்தடம் தருவதன் மூலம் முக அரிப்பு, முகத்தில் எண்ணெய்ப் பசை குறைவதோடு சீபமும் நல்ல சீராக இருக்கும். முகப் பருக்களையும் தடுக்கும். முகத்துளைகள் திறக்கப்பட்டு முகம் இறுக்கமாகும்.
ஐஸ் ஒத்தடத்தால் பிரச்னைகள்
நேரடியாக ஐஸ் ஒத்தடம் தருவதால் முக நரம்புகள் பாதிக்கப்படலாம்.
சரும பிரச்னைகளுக்காக இதை மட்டும் நம்பக்கூடாது
ஒரு சரும மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவேண்டும்.
ஒரு டவல் அல்லது துணியில் சுற்றிதான் பயன்படுத்த வேணடும்
அலர்ஜி பிரச்னை உள்ளதா என்பதை அறியவேண்டும்.
ஐஸ் ஒத்தடத்திற்கு ஈடாக சில இயற்கை முறைகள் உள்ளன. அதை முயற்சிக்கலாம். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்
க்ரீன் டீ
இதில் பல நன்மைகள் உள்ளன. இதை டிகாக்ஷனாக அந்த நீர் மிகவும் சருமத்திற்கும் சிறந்தது. இதை கொதிக்கவைத்து ஆறிய பிறகு ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஐஸ் கட்டியானதும் இதை முகத்திற்கு பயன்படுத்தலாம். இதில் அழற்சி எதிர்ப்பு மாறும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் நல்ல பயனளிக்கும்.
ஆலோவேரா
இந்த ஜெல்லுடன் தண்ணீர் கலந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஐஸ் கட்டிகளாக்கி இந்த ஐஸ்க்யூபை முகத்தில் தடவ சருமம் நீரேற்றமாக இருக்கும்.
வெள்ளரிக்காய் புதினா
வெள்ளரிக்காய் மற்றும் புதினாவை சேர்த்து அரைத்து அதை ஐஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ்கட்டிகளாக்கி அதை முகத்தில் தடவ புத்துணர்ச்சி தருவதுடன் நீரேற்றம் ஆகவும் இருக்கும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் உடன் தண்ணீர் சேர்த்து அதை ஐஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டியாக உருவானதும் இதைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்க முகம் புத்துணர்வு பெறும்.
காபி பௌடர்
காபி டிகாக்ஷன் தயாரித்து அது குளிர்ந்ததும் ஐஸ்ட்ரேயில் ஊற்றி கட்டிகளானதும் இந்த ஐஸ்கட்டிகளைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்க உங்கள் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் ஆகும்.
மஞ்சள் தேன்
ஒரு கப் சுத்தமான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் தேன் சேர்த்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து கட்டியானதும் முகத்தில் ஒத்தடம் கொடுக்க அழற்சி நீங்குவதுடன் முகம் தங்கமாக ஜொலிக்கும்.