கோடைகாலமும், கொரியப் பெண்களின் சரும பராமரிப்பு முறைகளும்! 

Korean Girl
The Korean Skin Care Routine for Summer

ஆரோக்கியமான இளமை தோற்றம் கொண்ட சருமத்தை அடைவதற்கு, கொரிய பெண்கள் பின்பற்றும் சருமப் பராமரிப்பு வழக்கம் உலக அளவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக கோடைகாலத்தில் அதிக வெப்பம், சூரிய ஒளி போன்றவற்றை எதிர்த்து போராடுவதற்கு, சருமப் பராமரிப்பு இன்றியமையாதது. இந்த பதிவில் கோடைகாலத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க கொரிய பெண்கள் பின்பற்றும் சருமப் பராமரிப்பு முறைகளைத் தெரிந்து கொள்வோம் வாங்க. 

  • Double Cleansing: பொதுவாகவே கொரிய பெண்களின் சரும பராமரிப்பு முகத்தை நன்றாக கழுவுவதில் இருந்து தொடங்குகிறது. அதாவது மேக்கப், சன் ஸ்கிரீன் போன்ற அதிக எண்ணெய் சார்ந்த விஷயங்களை நீக்க ஒரு விதமான க்ளென்சரை பயன்படுத்தவும். அதே நேரம் சருமத்தில் உள்ள அசுத்தங்களையும், வியர்வையையும் நீக்க நீர் சார்ந்த க்ளென்சரைப் பயன்படுத்தவும்.  

  • Exfoliation: சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கும், சருமத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதற்கும் Exfoliation மிகவும் முக்கியமானது. குறிப்பாக கோடையில் வியர்வை மற்றும் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் போது இதை கட்டாயம் செய்ய வேண்டும். 

  • நீரேற்றம்: கோடை காலத்தில் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு கற்றாழை கொண்ட டோனர்கள், எசன்ஸ்கள் மற்றும் சீரம்கள் போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்தவும். இந்தப் பொருட்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுத்து பளபளப்பாக மாற்ற உதவும். 

  • மாய்ஸ்சரைசர்: ஜெல் அடிப்படையிலான அல்லது நீர் சார்ந்த மாஸ்சரைசர் பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு இயற்கையான நீரேற்றத்தை வழங்குகிறது. இது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, இயற்கையான ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. 

  • சன் ஸ்கிரீன்: தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க கோடைகாலங்களில் அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும். வெளியே செல்லும்போது கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சன் ஸ்கிரீனைத் தொடர்ந்து பயன்படுத்தவும். 

  • Sheet Mask:  ஷீட் மாஸ்க் பயன்படுத்துவது கொரிய தோல் பராமரிப்பு நடைபெறுகிறகளில் மிகவும் முக்கியமானது. இது சருமத்திற்கான நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை விரைவாக வழங்குகிறது. நீங்கள் வெளியே சென்று வீட்டுக்கு திரும்பியதும் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்க, வெள்ளரிக்காய் அல்லது கற்றாழை போன்ற குளிரூட்டும் பண்புகளைக் கொண்ட பொருட்களை பயன்படுத்தி ஷீட் மாஸ்க் செய்யுங்கள். 

  • கண் பராமரிப்பு: பொதுவாகவே சரும பராமரிப்பில் கண் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. உங்கள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோலுக்கு சிறப்பு கவனம் செலுத்த மறக்காதீர்கள். கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் குறைக்க இவற்றிற்க்கென இருக்கும் கிரீம் அல்லது ஜெல் பயன்படுத்தவும். 

  • Night Routine: தூங்குவதற்கு முன் ஸ்லீப்பிங் மாஸ்க் அல்லது ஈரப்பதமூட்டும் நைட் கிரீமைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கும். இந்த தயாரிப்புகள் உங்கள் சருமத்தை சரி செய்து, இயற்கை பளபளப்பைக் கொடுக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கொரிய மக்கள் விரும்பி உண்ணும் பாஞ்சனில் அப்படி என்னதான் இருக்கிறது?
Korean Girl

கொரிய பெண்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிதான் தங்களது சருமத்தை ஜொலி ஜெலிப்பாக பராமரிக்கின்றனர். எனவே நீங்களும் இவற்றைப் பின்பற்றி கோடை காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com