வெல்லத்தை நாம் சமயலில் பயன்படுத்திதான் பார்த்திருப்போம். ஆனால், வெல்லம் முகச்சருமம் மற்றும் முடிக்கும்கூட அவ்வளவு நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெல்லத்தில் நிறைந்துள்ளன.
சமயலில் பயன்படுத்தும் வெல்லமானது, வெள்ளை முடியை போக்க உதவுவதோடு, முடியின் தரத்தையும் மேம்படுத்தும். மற்றும் வெல்லம் ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர். ஆகையால், இது சருமத்தின் அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளையும் நீக்குகின்றது. மேலும் வெல்லத்தில் உள்ள கிளைகோலிக் அமிலம் இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால், முகம் பளபளாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
வெல்லத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள், முதுமையினால் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கள்களை எதிர்த்துப் போராடுகின்றது. இதனால், முதுமை சீக்கிரம் வராது. அதேபோல் இது சுருக்கங்கள் மற்றும் கோடுகள் வராமல் தடுக்க உதவும்.
மேலும் வெல்லம் ரத்தத்தை சுத்தம் செய்வதால், பருக்கள் வராது. தினமும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது அல்லது காலை தேநீரில் சேர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும். வெல்லம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. அதன் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகள் சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தை உங்கள் தோலுக்கு இழுக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
1. வெல்லத்துடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறுடன் கலந்து ஒரு ஸ்க்ரப்பை உருவாக்குங்கள். அந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
2. வெல்லம் பேஸ் மாஸ்க்கை உருவாக்க ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் உடன் வெல்லம் தூளைக் கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு பின் கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
3. மசித்த வாழைப்பழத்துடன் வெல்லம் மற்றும் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ் மாஸ்க்கை தயார் செய்யவும். அதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற விடவும்.
இந்த மூன்று வழிகளில் வெல்லத்தைப் பயன்படுத்தினால், முகச்சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.