குளிப்பதன் அவசியமும், குளிக்காவிட்டால் ஏற்படும் அபாயங்களும்!

Bathing for health
Bathing is essential
Published on

ரண்டு நாட்களுக்கு குளிக்காமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? உடலில் 1000 வகையிலான பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும். இவை, சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. இதனால், சருமத் தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  அன்றாடம் நம் உடலில் உருவாகும்  நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டுமானால், நாம் தினமும் குளிக்க வேண்டும். 

அற்புதங்கள் நிறைந்த கற்றாழை 

இந்த வெயில் காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதை பற்றி நாம் யோசித்து கொண்டிருக்கும் இத்தறுவாயில் கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகின்றது. சாதாரணமாக எங்கும் காணப்படும் கற்றாழை, எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டவை. கோடைக்காலத்தில் இதனை எப்படி பயன்படுத்தவது என்பதை பார்க்கலாம்.

வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, கற்றாழை ஜீசை அருந்தலாம். கற்றாழையை சுத்தமாக கழுவி அதன் ஜெல்லை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து தண்ணீர்' மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இந்த ஜெல்லை மோருடன் சேர்த்து குடித்தால் நல்ல குளிர்ச்சியாக இருக்கும். 

கற்றாழை ஜெல்லினை முகத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் வைத்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும், முகப்பரு நீங்கும். 

இதையும் படியுங்கள்:
ஹேர் டையால் ஏற்படும் ஆபத்துகள்! உஷார் மக்களே!
Bathing for health

இந்த ஜெல்லை தலைக்கும் தேய்த்து குளித்து வந்தால் உடல் உஷ்னம் நீங்கும், முடி உதிர்வது குறையும். 

இந்த சோற்று கற்றாழையை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி தைலமாக தலைக்கு பயன்படுத்தலாம். 

கற்றாழை ஜெல்லை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சருமம் வறண்டு போகாமல், முகம் இளமையாகவே இருக்கும். 

- அமுதா அசோக்ராஜா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com