கழுத்துக்கும் வேண்டும் அழகு பராமரிப்பு!

health awarness
health awarnessImage credit - pixabay
Published on

முகத்தைப் போலவே கழுத்தையும் கச்சிதமாகப் பராமரிக்க செய்ய வேண்டியது அவசியம்.

சிலருக்கு நகைகளால் கழுத்தில் நகைகளால் அலர்ஜி ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் கவரிங் நகைகளை தவிர்க்க வேண்டும். நகைகளால் கழுத்தில் அலர்ஜி ஏற்பட்டு கருமை வந்தால் பால், தேன், எலுமிச்சைசாறு சம அளவில் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடம் கழித்து பின் வெது வெதுப்பான நீரில் அலசி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் பிரச்னை தீரும்.

பாசிப்பருப்பு மாவில் ஆலிவ் எண்ணெய், பன்னீரும் சம அளவில் கலந்து பசைபோல கழுத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவலாம்.

தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் பூசி பத்து நிமிடம் ஊறவைத்து பின் கழுவலாம். வாரம் ஒரு முறை செய்தால் கழுத்து மினுமினுப்பாக நிறமும் பெறும்.

கோஸ் அரைத்து சாறு எடுத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தேய்த்து பின் கழுவி வந்தால் கருமை நீங்கும்.

முல்தானி மிட்டியில் பன்னீர், கிளிசரின் சிறுதுளிகள் கலந்து கழுத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ கருமை நிறம் நீங்கி, சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

பால் பவுடர் ஒரு டீஸ்பூன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைசாறு , அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து பூசி மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரம் ஒரு முறை இதனை செய்துவந்தால் கழுத்து பளிச்சென்று இருக்கும்.

கோதுமை மாவு, ஒட்ஸ் பவுடர், பாசிப்பயிறு மாவு இம் மூன்றையும் சம அளவில் எடுத்து பால் கலந்து குழைத்து கழுத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை வாரம் மூன்று முறை செய்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
கத்தரிக்காயை ஒதுக்கினால் இழப்பு உங்களுக்குத்தான்!
health awarness

பீச் பழத்தை மசித்து சாறு எடுத்து அதனுடன் தயிர், தேன் கலந்து கழுத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து தண்ணரில் கழுவினால் கருமை நீங்கி சுருக்கங்கள் நீங்கும்.

மைதா மாவில் வெண்ணெய் கலந்து பிசைந்து கழுத்தைச் சுற்றி பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கரைத்து எடுத்து கழுவினால் கருமை நீங்கும்

உருளைக் கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சாறு எடுத்து கழுத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் கருமை படிப்படியாக மறையும்.

சிலருக்கு கழுத்தில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும். அதற்கு பால் ஆடையில் குங்குமப்பூ கலந்து தடவி கால் மணி நேரம் கழித்து கழுவி வந்தால் கருமை, புள்ளிகள் நீங்கும்.

இதில் ஏதாவது ஒன்றை விடாமல் செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கி மினு மினுப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com