முகம் பளபளக்க இந்த உணவு பொருட்களே போதும்… பார்லரே போக வேண்டாம்!

Glowing skin
Glowing skin
Published on

முகத்தைப் பளபளவென்று மாற்ற நாம் பார்லர்தான் செல்வோம். ஆனால், இனி இந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால், எங்குமே போகத் தேவையில்லை. ஏன்! வீட்டில்கூட எந்த ஃபேஸ் பேக்கும் போடத் தேவையில்லை.

பார்லர் சென்று பல ரூபாய் செலவு செய்து முகத்தை பளபளப்பாக்குவோம். ஆனால், அது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி எழும். அதேபோல் வீட்டிலேயே இயற்கையாக ஃபேஸ் பேக் செய்து முகச்சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சிப்போம். ஆனால், தொடர்ச்சியாக முயற்சிப்போமா? என்ற சந்தேகம் எழும்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமும், முகம் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே, முகமும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி நமது சருமத்தை உள்ளிருந்து அழகு படுத்தக்கூடிய ஊதா நிறத்தில் இருக்கும் சில உணவு வகைகளைப் பார்ப்போம்.

அந்தவகையில் எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை சருமம் சேதமடைவதை தடுத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த முட்டைக்கோஸை எடுத்துக்கொள்ளுங்கள். முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

திராட்சைப்பழம்:

திராட்சைப்பழம் பலரால் அதிகம் சாப்பிடப்படும் ஒரு பழம். இந்த பழங்களை எடுத்துக்கொள்வதால், சூரிய ஒளியிலிருந்து நமது சருமம் காக்கப்படும். ஆய்வுகளின் மூலம், இந்த திராட்சையை தொடர்ந்து உட்கொண்டவர்கள் உட்கொள்ளாதவர்களை விட சருமத்தில் சிறந்த மாற்றங்களை பெற்றதாக தெரியவந்துள்ளது.

பீட்ரூட்:

 பீட்ரூட் ஜூஸ் குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் மேலும் இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தில் உள்ள செல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு உட்படாமல் பாதுகாக்கிறது. இதனால் முகத்திற்கும் பளபளப்பு கிடைக்கும்.

கத்தரிக்காய்:

கத்தரிக்காயில் உள்ள ஒரு வித கிளைக்கோஸைடுகள் சரும புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதாக கூறப்படுகிறது. கத்திரிக்காயில் சரும ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
ஒருவரை வயதானவராகக் காட்டக்கூடிய ஃபேஷன் தவறுகள் என்னென்ன தெரியுமா?
Glowing skin

அவகேடோ:

அவகேடோவை தினமும் எடுத்துக்கொள்வதால், சருமம் பளபளப்பாக இருக்கும். வைட்டமின் கே, வைட்டமின் சி ஆகியவை முகச்சருமத்திற்கு மிகவும் தேவை. சர்க்கரை வள்ளி கிழங்கு, ப்ரக்கோலி, சிவப்பு திராட்சை, தக்காளி போன்றவற்றில் நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக மேல்சொன்ன பழங்களை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன்மூலம் சீக்கிரம் முகம் பளபளப்பாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com