ஒருவரை வயதானவராகக் காட்டக்கூடிய ஃபேஷன் தவறுகள் என்னென்ன தெரியுமா?

Fashion images....
Fashion images....
Published on

ணியும் ஆடை அணிகலன்களில் மனிதர்கள் செய்யும் சில தவறுகளால், உண்மையான வயதை விட அதிக வயதானவர்களாக மதிக்கப்படும் நிலை ஏற்படலாம். 11 விதமான ஃபேஷன் தவறுகளைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.

1. காலாவதியான ஸ்டைல்களில் உடை அணிவது: தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு அணியாமல், பல தசாப்தங்களுக்கு முந்தைய ஃபேஷன்களில் உடையணிவது ஒருவரை வயதானவர் போல தோற்றமளிக்கச் செய்யும்.    

2. பொருத்தமற்ற ஆடைகள்:

ஒவ்வொருவரும் தங்கள் உடல்வாகுக்கு பொருந்துமாறு உடையணிவது மிகவும் முக்கியம். லூசான அல்லது மிகவும் இறுக்கமான ஆடைகள் உடுத்தும் போது பார்ப்பதற்கு வயதான தோற்றத்தை தரும்.

3. முழுவதும் கருப்பு உடை: 

சிலர் கருப்பு நிறம் தங்களுக்கு பிடித்திருக்கிறது என்று என்கிற காரணத்திற்காக உடல் முழுவதும் கருப்பு நிற ஆடைகளை அணிந்திருப்பார்கள். அது பார்ப்பதற்கு முதுமையாக தோற்றமளிக்கும். 

4. வயதுக்கு பொருந்தாத ஆடைகள்:  

50 வயதான ஒருவர் 20 வயது இளைஞன் அல்லது இளம்பெண்ணை போல உடை அணிவது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.  முதிய தோற்றத்தை தரும். 

5. நடுநிலை வண்ணங்கள்; 

நடுநிலை வண்ணங்கள் என அறியப்படும் கருப்பு, வெள்ளை, சாம்பல்,  பழுப்பு, கிரீம் மற்றும் நேவி ப்ளூ போன்றவை எல்லா காலங்களுக்கும் ஏற்றவை. ஆனாலும் இவற்றை எப்போதும் அணிந்தால் அது அவுட் டேட்டாக இருக்கும். எனவே பிற வண்ணங்களிலும் ஆடைகள் அணிந்தால் தான் இளமையாக அழகாக தோற்றமளிக்க முடியும். 

6. காலாவதியான நகைகளை அணிவது; 

பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பழைய பாணியிலான நகைகள் வயதான தோற்றத்தை தரும். எனவே நவீனபாணி நகைகளை அணியலாம். அதேபோல நிறைய நகைகள் அணியாமல் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நகைகள் அணிவது முக்கியம். 

7. பழைய ஸ்டைல் கண்ணாடிகள் 

காலாவதியான பழைய பிரேம்களை கொண்ட கண்ணாடிகள் தோற்றத்தை முதுமையாக்கி காட்டும். முகவடிவத்திற்கு ஏற்ற மாதிரியான ஸ்டைலான புதிய பிரேம்களை அணிய வேண்டும்.

8. ஹெவி மேக் அப்; 

முகத்திற்கு கனமான மேக்கப் மற்றும் அழுத்தமான கலரில் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது முதிர்ந்த தோற்றத்தை உருவாக்கும். லைட் கலரில் லிப்ஸ்டிக்கும், மெல்லியதான ஒப்பனை போதும். உடலின் வறட்சி தெரியாமல் இருக்க மாய்சரைசர் பயன்படுத்தலாம்.

9. பொருத்தமற்ற காலணிகள்;

அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற வகையில் காலணிகளை தேர்ந்தெடுத்து அணிவது முக்கியம். சில சிறு வயதுக்காரர்கள் கூட கால்வலிக்காக  மருத்துவர் பரிந்துரைத்த காலணிகளை அணிந்திருப்பார்கள். அது வயதானவர்கள் போல காட்டும். பிற சந்தர்ப்பங்களில் அவற்றை அணிந்து கொள்ளலாம். விழாக்கள் திருமணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் உடைகேற்ற காலணிகள் அணியலாம். 

இதையும் படியுங்கள்:
ஒருவருடைய மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது தெரியுமா?
Fashion images....

10. பழைய சிகை அலங்காரம் 

பழைய  ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து கொள்வது வயதானவராக காட்டும். எனவே சிகை அலங்காரத்தை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இளமையாக தோற்றமளிக்க முடியும் 

11. நரைமுடி & தொப்பை;

தலையில் ஆங்காங்கே சில நரைத்த முடியுடன்  30, 35 வயதில் இருக்கும் ஒருவரை, கல்லூரி மாணவர்கள் கூட அங்கிள், ஆன்ட்டி என்று  அழைக்கக்கூடும். அது போல தொப்பையும் வயதான தோற்றத்தை அளிக்கும். இயற்கையான முடிச்சாயத்தினால் முடியை கருமைப்படுத்திக் கொள்வதும், உடல் எடைக் கட்டுப்பாடும் முக்கியம். 

இந்த தவறுகளை தவிர்த்தால் 60 வயதில் கூட ஒருவர் இளமையாக தோற்றமளிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com