மேக்கப் ரிமூவர் பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டியவை!

Makeup Remover
Makeup Remover
Published on

மேக்கப் போடுவது ஒரு கலை என்றால், மேக்கப்பை கலைப்பது ஒரு பெரிய கலையே ஆகும். இதுவே நமது சருமத்தை மேக்கப்பிலிருந்து பாதுகாக்கும்.

நம்மை அழகாக்கிக்கொள்ள மேக்கப் என்பது தற்போது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு. நிகழ்ச்சிக்குப் போனால் மேக்கப், கல்லூரிக்குப் போனால் மேக்கப் என்று வீட்டில் இருக்கும் நேரங்களைத் தவிர எப்போதும் மேக்கப்தான். அழகுசாதன பொருட்களில் ரசாயனங்கள் கலக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் அதனை நாம் முகத்தில் பயன்படுத்தும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றவாரே அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படும். மேக்கப் போடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மேக்கப் கலைப்பதும் முக்கியமே.

மேக்கப்பை கலைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.  உடலில் உள்ள மற்ற தோல்களைவிட முகத்தின் சருமம் உணர்திறன் மிக்கது. ஆகையால், உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்றவாரு மேக்கப் ரிமூவர் ப்ராடக்ட் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், சிலருக்கு சரும வீக்கம், சரும திட்டுகள் சிவத்தல் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும்.

2.  முகச்சருமத்தை சுத்தம் செய்யும்போது, தாடை  மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளிலும் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் சீராக இருக்கும். மேலும் கழுத்துப் பகுதிகளில் சுத்தம் செய்யாமல் விட்டோமானால், வயதான தோற்றத்தை சீக்கிரம் வெளிப்படுத்தும்.

3.  மென்மையான சருமம் கொண்டது முகம் என்றால், முகத்தின் மிகவும் மென்மை வாய்ந்தவை கண்கள். ஆகையால், கண்களில் மேக்கப் ரிமூவ் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். மற்றப் பகுதிகளில் பயன்படுத்தும் க்ளென்ஸர் பயன்படுத்துதல் கூடாது. கண்களுக்கு ஏற்ற க்ளென்ஸர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் க்ளென்ஸரை ஒரு காட்டனில் வைத்து, அதனை கண்கள் பகுதிகளில் வைத்து சில நொடிகள் கழித்து எடுக்க வேண்டும். அழுத்தவோ அல்லது துடைக்கவோ தேய்க்கவோ கூடாது.

இதையும் படியுங்கள்:
ஹேர் டிரையரை தினமும் பயன்படுத்துவதால் ஏற்படும் 12 விளைவுகள் தெரியுமா?
Makeup Remover

4.  சருமத்தை சுத்தம் செய்ய சூடான நீரையோ அல்லது குளிர்ந்த நீரையோ பயன்படுத்துதல் கூடாது. சூடான நீர் சருமத்தின் இயற்கையான கொழுப்பை தடை செய்யும். அதேபோல் குளிர்ந்த நீர் பொருத்தமானது இல்லை. ஆகையால், வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம்.

5.  முகச்சருமத்தின் மேக்கப்பை அழுத்தி தேய்த்து அகற்றக் கூடாது. ஈரமான திசுக்கள் அல்லது  மேக்கப் துடைப்பான்கள் வைத்து 20 நொடிகள் வைத்து பிறகு முகத்தில் லேசாக தேய்க்க வேண்டும். வேகவேகமாக தேய்ப்பதால், சருமம் சிவந்துவிடும்.

மேக்கப்பை ரிமூவ் செய்யும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com